ஜியோ மயம் கதிகலங்கும் ஏர்டெல்.! ரயில்வேயிலும், டிடிஹெச்சிலும் ஆப்பு.!
தொலைபேசி சந்தையை தொடர்ந்து டிடிஹெச் சேவையிலும் ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடி ஆப்பர்களையும் அறிவித்துள்ளது. இதனால் ஜியோ நிறுவனம் ஏர்டெல்லுக்கு இதிலும் அடுத்த ஆப்பை வைத்துள்ளது.
இந்திய தொலை பேசி சந்தையில் ஜியோ நிறுவனம் நுழைந்தது. தனது அதிரடியான இலவச திட்டத்தால், குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றது.
மேலும், ஜியோ நிறுவனம் ஏராளமான இலவச சலுகைகளை வழங்கியதால், ஏர்செல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டம் அடைந்ததால், தொழிலுக்கு மூடு விழா நடத்தி விட்டன.

ஏராளமான ஆப்பர்கள் இருப்பதால், இரட்டை சிம் கொண்ட போன்களிலும் ஜியோ முதன்மை பெற்றதாக ஆகிவிட்டது. ஏர்டெல் இரண்டாம் நிலை சிம் ஆகி ஆகிவிட்டது.
மேலும், இன்கம்மிங் காலுக்கு பயன்படுத்த துவங்கி விட்டதால், வருமானம் இல்லாமல் ஏர்டெல் நஷ்டத்திற்கு சென்றுவிட்டது. ரயில்வேயில் இருந்த 3.78 லட்சம் வாடிக்கையாளர்களும் தற்போது ஜியோவுக்கு சென்றுவிட்டனர்.
தொலைபேசி சந்தையை தொடர்ந்து டிடிஹெச் சேவையிலும் ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடி ஆப்பர்களையும் அறிவித்துள்ளது. இதனால் ஜியோ நிறுவனம் ஏர்டெல்லுக்கு இதிலும் அடுத்த ஆப்பை வைத்துள்ளது.

ஜியோ நிறுவனம்:
இந்திய தொலைபேசி சந்தையில் ஜியோ நிறுவனம் தினமும் 100 எஸ்எம்எஸ், ரோமிங் ப்ரீ, காலர் டியூன், 2 ஜிபி டேட்டா 4 ஜி வோட்டு வழங்குகின்றது. பல்வேறு அதிரடி ஆப்பர்களையும் ஜியோ நிறுவனம் வழங்கி வருவதால், ஏர்செல், ரிலையன்ஸ் நிறுவனங்கள் மூடு விழா கண்டன.
தற்போது, வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியுள்ளன.

ஏர்டெல் நிறுவனம்:
ஏர்டெல் நிறுவனம் தொலைபேசியை தொடர்ந்து, டிடிஹெச், ஏர்டெல் பிராட்பேண்ட், இன்டர்நெட், டிடிஹெச், டிவி ஆப், ஏர்டெல் ரவுட்டர், ஏர்டெல் மணி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகின்றது.

ஜியோ சேவை:
தற்போது ஏர்டெல் சேவை வழங்கும் பிரிவுகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலைபேசி, டிடிஹெச் சேவை, டிவி ஆப், ரவுட்டர், ஜியோ மணி உள்ளிட்ட சேவைகளையும் அடுத்து துவங்கியுள்ளது. தொழில் நுணுகத்துடன் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கின்றது.

தொலைபேசி சந்தையில் நஷ்டம்:
ஜியோ நிறுவனம் புகுந்ததால் தொலைபேசி சந்தையில், சில நிறுவனங்கள் தொழிக்கு பூட்டு போட்டு விட்டனர். ஏர்டெல், ஐடியா, போடாபோன், பிஎஸ்என்எல், டோகோமோ உள்ளிட்ட நிறுவனங்களில் சிம்கார்டுகளை இரண்டாம் நிலையாக பயன்படுத்த துவங்கி விட்டனர்.
ஜியோ சிம் கார்ட்டை அவுட் கோயிங்க்கும், இன் கம்மிங் கால்களுக்கு இந்த நிறுவனங்களை பயன்படுத்த துவங்கி விட்டனர். இதனால் தொழில் போதிய வருமானம் இன்றி நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

250 மில்லியன் கஷ்டமர்ஸ் நீக்க முடிவு:
முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே போல், வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது பங்கிற்கு 150 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. நீக்கம் செய்யப்படும் சந்தாதாரர்கள் அனைவரும் 2ஜி வாடிக்கையாளர்கள் மட்டுமே.

ரயில் டெல்லுக்கு அப்பு:
ரயில்வேயில் கடந்த 6 ஆண்டாக ஏர்டெல் நிறுவனம் சேவை வழங்கி வந்தது. தற்போது, இந்த சேவை வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிகின்றது. இதனால் ரயில்வேயில் அனைத்து அழைப்புகளுக்கு ஜியோ இலவசமாக கொடுத்து, 1.95 லட்சம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுந்துள்ளது.

ஆண்டுக்கு ரூ.100 கோடி பறிபோனது:
ரயில்வே துறையில் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம் கிடைத்து வந்தது. தற்போது இது ஜியோவுக்கு செல்கின்றது. இதனால் ஏர்டெல் நிறுவனத்துக்கு இனி கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.100 கோடியும் பறிபோகின்றது. மேலும் ஜியோ நிறுவனம் தனது ரயில்வே அதிகாரிகளுக்கும் பல்வேறு சேவை சலுகைகளையும் அறிவித்துள்ளது.

ரயில்வேயில் மட்டும் 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள்:
ரயில்வேயில் 1.95 லட்சம் சேவை அளித்தாலும், ஏர்டெல்லை பயன்படுத்தி வந்த ரயில்வே ஊழியர்கள் என மொத்தம் சேர்த்து தற்போது, 3.78 லட்சம் ஊழியர்களை தங்கள் பக்கம் சேர்த்துள்ளது ஜியோ.

டிடிஹெச், ஜியோ டிவி ஆப்:
ஜியோ நிறுவனம் தற்போது, டிடிஹெச் மற்றம் ஜியோ டிவி ஆப்களிலம் இனி 621 லைவ் டிவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதில், தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாப்பி, கன்னடம், குஜராத்தி, மலையாளம், அஸ்சாமி, ஒடியா, போஜ்புரி, உர்து, பெங்காலி, பிரெஞ்ச், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த சேனல்களை ஜியோ நிறுவனம் வழங்கின்றது.
இதில் பல்வேறு வகையில் சேனல்கள் இருக்கின்றன. இனி நாம் லைவ்வாக கூட டிவி ஆப்கிளிலும் பார்க்க முடியும்.

ஏர்டெல்லுக்கு ஆப்:
ஏர்டெல் நிறுவனம் டிவி ஆப் மற்றும் டிடிஹெச் சேவையில் 375 பிளஸ் சேனல்களைத்தான் வழங்கி வருகின்றது. 10 ஆயிரம் பிளஸ் மூவீஸ், டிவி ஷோக்களை வழங்குகின்றது குறிப்பிட தக்கது.
இதில் ஜியோ நிறுவனம் அதிரடியில் இறங்கியுள்ளதால், ஏர்டெல்லுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எதிலும் ஜியோ மயம்:
ஜியோ நிறுவனம் இந்தியாவில் தற்போது அனைத்து துறைகளிலும் தன் சேவையை விரிவடைய செய்து கொண்டிருக்கின்றது. இதனால் ஏர்டெல் நிறுவனம் கதிகலங்கி போயியுள்ளது. குறைந்த விலையில் அதிக வாடிக்கையாளர்களையும், லாபத்தையும் அள்ளி வருகின்றது. ஜியோ நிறுவனம்.


Click it and Unblock the Notifications