Home
Music

ஐபோனுக்கான புதிய டோக்கிங் ஆடியோ சிஸ்டம்!

By Karthikeyan
ஐபோனுக்கான புதிய டோக்கிங் ஆடியோ சிஸ்டம்!

ஹார்மன் இன்டர்நேசனல் நிறுவனம் ஒரு புதிய டோக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த டோக்கிங் சிஸ்டம் ஐபோன், ஐபாட் மற்றும் ஐபேடு ஆகியவற்றிற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கிங் சிஸ்டத்தின் பெயர் ஜேபிஎல் ஆன்பீட் எக்ஸ்ட்ரீம்.

இந்த டோக்கிங் சிஸ்டம் ஐஒஎஸ் இயங்கு தளம் கொண்ட சாதனங்களை ஸ்டீரியோ சிஸ்டமாக மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டிருக்கிறது. இந்த டோக்கிங் சிஸ்டம் ஸ்கைப் அல்லது ஆப்பிளின் பேஸ் டைம் போன்றவற்றிற்கு ஏற்ற சரியான சாதனம் ஆகும். அதுபோல் வீடியோ கான்பரன்ஸ் போன்றவற்றிற்கும் இந்த டோக்கிங் சிஸ்டம் பேருதவியாக இருக்கும்.

இந்த ஜேபிஎல் 360 டிகிரி ஒலி அதிர்வுகளை ஏற்படுத்த வல்லது. இதில் உள்ள ரேடியோ ப்ரீக்வன்சி ரிமோட் 30 அடி தொலைவில் இருந்து கூட இந்த டோக்கிங் சிஸ்டத்தை இயக்கும். அதுபோல் இந்த ஜேபிஎல் டோக்கிங் சிஸ்டம் டிவிக்கு வீடியோக்களை அனுப்பும் சக்தி கொண்டது.

இந்த ஜேபிஎல் டோக்கிங் சிஸ்டத்தின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் ஐபாட் மற்றும் ஐபோன் மற்றும் ஐபேட் போன்ற சாதனங்களில் மிக எளிதாக பொருந்தக்கூடியது.

இதில் உள்ள ஜேபிஎல் ஆன்பீட் எக்ஸ்ட்ரீம் லவுட் ஸ்பீக்கரில் ப்ளூடூத் மூலம் இசையை பரிமாற்ற முடியும். மேலும் இந்த சாதனம் சுழலும் கனக்டரைக் கொண்டுள்ளதால் இதன் திரையை சுழற்ற முடியும். அதுபோல் இது 30 வாட்ஸ் கொண்ட க்ரிஸ்டல் க்ளியர் ஆடியோவை வழங்குகிறது.

மேலும் தரமான ப்ரீக்வன்சிக்காக இந்த சாதனம் ஜேபிஎல் ரிட்ஜ் ட்வீட்டர்கள் மற்றும் அட்லஸ் போன்றவற்றைக் கொண்டுள்ளது. அதுபோல் இந்த டோக்கிங் சிஸ்டம் பில்ட் இன் மைக்ரோபோன் கொண்டிருப்பதால் ப்ளூடூத் மொபைல் போன்கள் மூலம் வரும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதோபோல் வரும் அழைப்புகளையும் எடுக்க முடியும். அதுபோல் இதில் இசை கேட்டுக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அது தானாகவே நின்றுவிடும். அதுபோல் அழைப்பு முடிந்தவுடன் தானாகவே பாடல் தொடங்கிவிடும்.

இந்த டோக்கிங் சிஸ்டத்தின் ரேடியோ ப்ரீக்வன்சி ரிமோட் கண்ட்ரோல் மூலம் இதில் உள்ள மெனு, பாடல் அட்டவணை, வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை தேர்ந்தெடுக்க முடியும். இறுதியாக இந்த டோக்கிங் சிஸ்டம் எஎசி கோடக் மூலம் மிகத் தரமான இசையை வழங்குகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X