இசையில் மிரள வைக்கும் ஜேபிஎல் டாக் ஸ்பீக்கர் சிஸ்டம்

Posted By: Staff

இசையில் மிரள வைக்கும் ஜேபிஎல் டாக் ஸ்பீக்கர் சிஸ்டம்
ஜேபிஎல் நிறுவனம் லவ்ட் ஸ்பீக்கர்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்றதாகும். அந்நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தோடு சேர்ந்து ஐஓஎஸ்ஸில் இயங்கும் ஐபோன் மற்றும் ஐபோடுகளுக்கான ஸ்பீக்கர்களை தயாரிக்கிறது. இந்த ஸ்பீக்கர்கள் டூவல் போனிக்ஸ் ட்ரான்ஸ்டீயூசர்களோடு வருவதால் தரமான ஒலி அமைப்பை வழங்குகிறது. அதே போல் நமது மனத்திற்கும் அறிவுக்கும் அமைதியை வழங்குகிறது.

இதிலிருந்து வரும் இசை எங்கிருந்து வருகிறது என்று தெரியாத அளவிற்கு நிறைவாக இருக்கும். இந்த ஸ்பீக்கர்களை ஐபோன், ஐபேட் மற்றும் ஐபோட் ஆகியவற்றோடு இணைத்துக் கொள்ளலாம். அதற்கான யுனிவேர்சல் கனக்டரையும் இது கொண்டிருக்கிறது.

இந்த ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் ஆப்பிளின் டிவைஸ்களை பயன்படுத்துவோரை குறிவைத்து இருக்கிறது. இதை ஐபோன் அல்லது ஐபேடில் இணைத்து இசை கேட்கும் போது இதன் இசை தனித்துவமாக இருக்கும். மேலும் இந்த ஸ்பீக்கர்கள் நம்பிக்கைக்கு உரியதாகும்.

அதுபோல் ஸ்கைப் மற்றும் யூட்யூப் உரையாடல்களுக்கும் இந்த ஜேபிஎல் தரமான ஒலி அமைப்பை வழங்குகிறது. குறிப்பாக அதிரடி சண்டைப் படங்களைப் பார்க்கும் போது இது அளிக்கும் அதிரடி இசை நம்மை மிரள வைக்கும். மேலும் இது ரிமோட் கண்ட்ரோல் கொண்டிருப்பதால் தொலைவிலிருந்தே ஒலி அமைப்பை மாற்றி வைக்க முடியும். சினிசிங்கிற்காக யுஎஸ்பி கனக்சனும் இது கொண்டுள்ளது. இது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது.

இதன் விலை ரூ.8,000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இது அக்டோபர் மாத தொடக்கத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்