Home
Music

ஸ்டைல் பழசு, தொழில்நுட்பம் புதுசு..!!

By Karthikeyan
ஸ்டைல் பழசு, தொழில்நுட்பம் புதுசு..!!

சூப்பரான ஹெட்போன்களைக் களமிறக்கும் ஜெய்பேர்ட் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் பேண்ட் வடிவத்தில் ஒரு புதிய ஹெட்போனைக் களமிறக்குகிறது. இந்த ஹெட்போன் 1980களில் உள்ள ஹெட்போன்களின் ஸ்டைலில் நவீன தொழில் நுட்பத்தில் வருகிறது.

இந்த ஹெட்போன் ப்ளாடிஸ்டிக்கில் தயாரிக்கப்பட்டு பளபளப்பாக இருக்கிறது. இதில் கைரேகை போன்ற தடயங்கள் பதியாது. எப்போதுமே இந்த ஹெட்போன் பளிச்சென்று இருக்கும்.

இந்த ஹெட்போனை தலையின் மீது அணிந்து கொள்ளலாம். இந்த ஹெட்போனை இயக்கும் கட்டுப்பாட்டு பட்டன்கள் அணைத்தும் இதன் ஒரு பகுதியில் உள்ளது.

இந்த புதிய ஹெட்போன் மிகவும் நெகிழ்வு தன்மை கொண்டது. இது ஈரத்தினால் எளிதாக பாதிப்படையாது. 8 மணி நேர இயங்கு நேரத்தைக் கொண்டது. ப்ளூடூத் வசதியுடன் வருவதால் இந்த ஹெட்போனை வயர்லஸ் மூலம் இயக்கலாம். மேலும் இந்த ஹெட்போனை இரண்டரை மணி நேரத்தில் முழு சார்ஜ் செய்து விடலாம்.

இந்த ஜெய்பேர்ட் ஹெட்போன் மைக்ரோபோன் கொண்டு வருவதால் இதில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் சிரமம் இல்லாமல் அழைப்பை எடுக்க முடியும். இது யுஎஸ்பி போர்ட் கொண்டிருப்பதால் இதன் வழியாக இந்த ஹெட்போனை சார்ஜ் செய்ய முடியும். நீண்ட நேரம் இதை தலையில் அணிந்திருந்தாலும் இது எரிச்சலைக் கொடுக்காது.

இதன் இயர்பேடுகள் மிகவும் மென்மையாக உள்ளன. மேலும் இதை ஒரே நேரத்தில் 2 இசை சாதனங்களில் பொருத்த முடியும். இந்த ஹெட்போன் உண்மையில் இசை அனுபவத்திற்கு உத்திரவாதம் கொடுக்கும். இதன் விலை ரூ.5000 ஆகும். மேலும் இது சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X