Home
Music

செயின் போன்று அணிந்து செல்லும் வசதியுடன் புதிய ஹெட்செட்

By Super
செயின் போன்று அணிந்து செல்லும் வசதியுடன் புதிய ஹெட்செட்
ஆடியோ இசை தயாரிப்புகளை வழங்குவதில் ஜப்ரா நிறுவனத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக அந்நிறுவனம் புதிய புதிய தொழில் நுட்பங்களை அமுல்படுத்துவதில் ஏப்போதுமே சளைத்ததில்லை. அவற்றின் புதிய ஜப்ரா ஸ்ட்ரீட் 2 ஒரு இசை ஆபரணத்தைப் போலவே இருக்கிறது.

மேலும், செயின் போன்று இருப்பதால் இதை கழுத்தில் அணிந்து செல்லலாம். இந்த ஜப்ரா ஸ்ட்ரீட் 2 தரமான ஒலி அமைப்பை வழங்குகிறது. மேலும் இரைச்சலைத் தவிர்க்கும் இயர் பிட்சுக்களைக் கொண்டிருப்பதால் இதன் இசை மிகத் தெளிவாக இருக்கும்.

இந்த ஜப்ரா ஸ்ட்ரீட் 2ல் ஒரு ப்ளூடூத் 3.0 மற்றும் இடிஆர் ஹெட்செட்டும் உள்ளது. இந்த ஹெட்செட்டின் ரேன்ஜ் 10 மீட்டர் அளவிற்கு இருக்கும். மேலும் இந்த டிவைஸ் எம்3டி 2.0 உள்ளதால் இதன் பேஸ் இசை மிகச் சிறப்பாக இருக்கும்.

மேலும் இதன் தொழில் நுட்பத்தின் மூலம் ஒரே நேரத்தில் மற்ற 2 டிவைஸ்களோடு இந்த டிவஸை இணைக்க முடியும். மேலும் இது ஸ்ப்ளாஷ் ப்ரூப் கொண்டு வருவதால் மழை நீர் பட்டாலும் இந்த ஹெட்செட் ஒன்றும் ஆவதில்லை. மேலும் இதில் 3.5எம்எம் ஆடியோ ஜாக்கும் இணைப்புக்காக வழங்கப்படுகிறது.

ஜப்ரா ஸ்ட்ரீட் 2 ஒரு மெட்டல் சங்கிலியுடன் வருகிறது. அதுபோல் இதை துணியால் மூடிக் கொள்ளலாம். மேலும் இதை ஸ்மார்ட் போன் மற்றும் ப்ளூடூத் வசதியுள்ள எந்த ஒரு டிவைஸோடும் மிக எளிதாக இணைத்துக் கொள்ளலாம். இதனுடைய எடையைப் பார்த்தால் அது 30 கிராம் மட்டுமே.

அதனால் இதை மிக எளிதாக எங்கும் எடுத்துச் செல்ல முடியும். மேலும் ஒலி பாதுகாப்பிற்காக டிஜிட்டல் ஒலி ப்ராசஸிங்கும் இதில் உள்ளது. மேலும் இதில் மியூட் வசதி, ஆன்ஸ்வரிங் கால் வசதி, ரிஜக்டிங் கால் வசதி மற்றும் சைலண்ட் மோட் வசதி ஆகியவையும் இதில் உள்ளன.

மேலும் ரிமோட் கட்டுப்பாட்டு வசதியும் இதில் உண்டு. இந்த பேட்டரி திறனைப் பார்த்தால் இது 8 மணி நேர டாக் டைம் மற்றும் 9.5 நாள் ஸ்டேண்ட் பை டைமையும் கொண்டுள்ளது. இது கருப்பு மற்று வெள்ளை நிறங்களில் வருகிறது.இந்த ஜப்ரா ஸ்ட்ரீட் 2ன் விலையைப் பார்த்தால் அது ரூ.3,800 ஆகும். மேலும் இது ஒரு வருட உத்திரவாதம் கொண்டு வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X