அழைப்புகளை எளிதாக கையாளும் வசதியுடன் புதிய ஹெட்செட்

Posted By: Staff

அழைப்புகளை எளிதாக கையாளும் வசதியுடன் புதிய ஹெட்செட்
ஜபராவின் புதிய ஜபாரா ப்ரோ 9450 ஹெட்செட் மூலம் பலவகையான செய்திகளுக்கு இலக்காக ஆகி இருக்கிறது. இந்த புதிய ஜபரா ஒரு யூசர் ப்ரண்ட்லியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த புதிய ஜபரா ப்ரோ 9450ன் மிக முக்கிய அம்சம், வாடிக்கையாளர்களுக்கு கால்களை மேனேஜ் செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கிறது. இதன் ஹெட்செட்டிலுள்ள பட்டனைத் தட்டினால் போதும். அது அலுவலகமாக இருந்தாலும் அல்லது நாம் பயணத்தில் இருந்தாலும் அழைப்பை எளிதாக எடுக்க முடியும். இந்த ஜப்ரா கால் மேனேஜர் சாப்ட்வேர் நமக்கு வரும் அழைப்புகளை எளிதாக கையாள்வதற்கு பெரும் உதவி புரிகிறது.

ஜப்ரா ப்ரோ 9450 தொடுதிரை வசதியை வழங்குவதால் நாம் அழைப்புகளை எளிதாக முறைப்படுத்த முடியும். மேலும் இதன் மல்டி யூஸ் கனக்டிவிட்டி மெத்தட் மூலமும் இதன் இன்ஸ்டாலேசன் மெத்தட் மூலமும் நாம் இதை செய்ய முடியும். மேலும் இதன் ஒலி அமைப்பு மிக துல்லியமாக இருக்கும். ஜப்ரா ப்ரோ 9450 ஜப்ரா பிசியுடன் வருகிறது. இது மோனோ ஸ்பீக்கருடன் டூவல் மைக்ரோபோனுடன் வருகிறது.

ஜப்ரா ப்ரோ 9450 வயர்லஸ் தொழில் நுட்பத்துடன் வருகிறது. குறிப்பாக இது தொழிலில் ஈடுபடுவோருக்கும் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கும் சிறப்பான ஒன்றாக இருக்கும். இது குறிப்பாக மைக்ரோசாப்ட் லின்க் 2010க்காக உருவாக்கப்படும் ஒன்றாகும். இதன் பேட்டரி 8 மணி நேர டாக் டைமையும் 46 மணிநேர ஸ்டேன் பை மோடையும் கொண்டுள்ளது.

இந்த ஜப்ரா ப்ரோ 9450 இந்தியாவில் ரூ. 14000க்கு கிடைக்கிறது. இதன் விலை அதிகமாக தெரிந்தாலும் இதன் செயல் திறன் மிக அம்சமாக இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot