புதிய கார் ஸ்பீக்கர்போனை அறிமுகம் செய்யும் ஜாப்ரா!

By Super
|
புதிய கார் ஸ்பீக்கர்போனை அறிமுகம் செய்யும் ஜாப்ரா!

புளூடூத் தொழில் நுட்ப சாதனங்களை உருவாக்கும் ஜாப்ரா நிறுவனம் இப்போது புதிய ஜாப்ரா ட்ரைவ் கார் ஸ்பீக்கர்போன் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த ஸ்பீக்கர்போன் மொபைல்களுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஒன்று. இதனால் காரில் செல்லும் போது மொபைல் எடுத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஜாப்ரா ஸ்பீக்கர்போன் மூலம் மொபைலை எடுக்கலாமலேயே, கார் ட்ரைவ் செய்து கொண்டே பேசி கொள்வது போல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிம் கார்டு நெட்வொர்க் மொபைல்களுக்கும் இந்த ஸ்பீக்கர்போன் சப்போர்ட் செய்யும். ஜாப்ரா நிறுவனத்தின் இந்த கார் ஸ்பீக்கர்போன், கார் போன்ற வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும். இந்த ஜாப்ரா ஸ்பீக்கர்போனில் ஏ2டிபி தொழில் நுட்ப வசதிகளையும் எளிதாக பெற முடியும்.

கார் ஓட்டி செல்லும் போது மொபைல் பேசுவதால் கவன குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஜாப்ரா ட்ரைவ் ஸ்பீக்கர்போன் மூலம் கார் ஓட்டி சென்றாலும் எந்த விதமான கவன குறைவும் ஏற்படாது.

ஏனெனில் இந்த ஸ்பீக்கர்போன் காரில் இருந்தால் எந்த மொபைலையும் கையில் எடுத்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்பது, கவன குறைவு ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். ஜாப்ரா ட்ரைவ் ஸ்பீக்கர்போன் ரூ.3,999 விலையில் எளிதாக கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X