ஐபாடுக்கான ஐவாவ் வழங்கும் 3டி ஆடியோ அடாப்டர்

Posted By: Karthikeyan
ஐபாடுக்கான ஐவாவ் வழங்கும் 3டி ஆடியோ அடாப்டர்

எஸ்ஆர்எஸ் லேப்ஸ் ஐபோட், ஐபோன் மற்றும் ஐபேட் மூலம் அதிரடி இசையை கேட்பதற்கான புதிய தொழில் நுட்பத்தைக் களமிறக்குகிறது. இது 3டி சரவுண்ட் சவுண்ட் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த ஆடியோ சாதனத்தின் பெயர் ஐவாவ் 3டி ஆடாப்டர் ஆகும். இதன் மூலம் ஐபேடுகளின் நாம் மிக அருமையான இசையைக் கேட்டு மகிழலாம்.

இந்த ஐவாவ் 3டி ஆடாப்டர் ஒரு சிறிய கனக்டர் போல இருக்கிறது. இதன் மூலம் நமது டிவைசையும் ஹெட்போனையும் மிக எளிதாக இணைக்க முடியும். இது நமது கெட்ஜெட்டிலிருந்து வரும் ஆடியோ அவுட்புட்டை 3டி சரவுன்ட் சவுண்டாக மாற்றி நமக்கு அளிக்கிறது.

ஐவாவ் 3டி ஆடாப்டரின் வசதிகளைப் பார்த்தால் அது உயர் தரமான இயற்கையான இசையை வழங்குகிறது. மேலும் இதில் பேஸ் இசை அதிகம். அதோடு இதை மற்ற கெட்ஜெட்டுகளில் இணைப்பது மிக எளிது. அதுபோல் இதில் ப்ரீ அப்ளிகேசன்களை பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது. இந்த அப்ளிகேசன்கள் மூலம் இதில் உள்ள ஒலி அமைப்பை நமது விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

ஐவாவ் 3டி ஆடாப்டர் பல மாடல்களில் வருகிறது. இதன் ப்ரீமியம் மாடல் ஐவாவ்-3டிஎச்எப் என்றும் பேஸ் மாடல் ஐவாவ்-3டி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இவை 5 நிறங்கள் கொண்டு பேஸ்ப்ளேட்டுகள் வருகின்றன. இந்த பேஸ்ப்ளேட்டுகளின் நிறங்களை நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பேஸ் பிளேட்டுகள் ப்ரீமியம் மாடலில் மட்டுமே உள்ளன.

இந்த ஐவாவ் 3டி ஆடாப்டரில் இருந்த வரும் இசை தியேட்டரில் இருந்து வரும் இசையின் தரத்தைப் போல இருக்கும். அதனால் படம் பார்க்கும் போது இதிலிருந்து நாம் மிக அருமையான இசையைக் கேட்க முடியும். மேலும் இதில் உள்ள இயர் பட்ஸ்களை நாம் தனியாக பிரிக்க முடியும்.

ஐவாவ் 3டி ஆடாப்டர் 2 மாடல்களில் வருவதால் ப்ரீமியம் மாடலின் விலை ரூ.4800 ஆகும். அதுபோல் ஐவாவ் 3டி ஆடியோ அடாப்டரின் விலை ரூ. 3000 முதல் 5000க்குள் இருக்கும். இந்த அடாப்டரை ஆன்லைன் மூலமும் வாங்க முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்