ஐபேட் மூலம் இயக்கும் வசியுடன் புதிய கார் ஸ்டீரியோ

Posted By: Staff
ஐபேட் மூலம் இயக்கும் வசியுடன் புதிய கார் ஸ்டீரியோ

தற்போது எல்லா எலக்ட்ரானிக்ஸ் பொருள்களிலுமே ஏராளமான புதுமைகள் வந்துவிட்டன. லேப்டாப்புகள், கனிணிகள், இசைப் பேழைகள் டேப்லட்டுகள், ஸ்மார்ட் போன்கள் ஏன் கார் ஸ்டீரியோ சிஸ்டம் என அனைத்திலுமே புதுமைகள் நிரம்பி வழிகின்றன.

ஒவ்வொரு புதுமையான அம்சம் வரும் போதும் அது மக்களிடம் அமோக வரவேற்பை பெறுகிறது.

குறிப்பாக அப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட் மற்ற தயாரிப்பாளர்களை இந்த புதுமையை நோக்கி நகர்த்திச் சென்றது எனலாம்.

அந்த வரிசையில் தற்போது ஜாக்சன் எலக்ட்ரானிக்ஸ் ஐ-ராக்கார் ஸ்டீரியோவில் ஐபோடை இணைப்பதற்கான அடாப்டரை உருவாக்க இருக்கிறது.

ஆனால் அதைப் பற்றிய அதிகாரப் பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

ஜாக்சன் எலக்ட்ரானிக்ஸ் கடந்த ஆகஸ்டில் ஐபோனை பயன்படுத்தக்கூடிய ஐ-ராக்கார் ஸ்டீரியோவை அறிமுகப்படுத்தியது.

இந்த டிவைஸை கார்களில் மிக எளிதாகப் பொருத்த முடியும். மேலும் இந்த ஸ்டீரியோவில் ஐபோனையும் இணைக்க முடியும்.

இந்த ஸ்டீரியோவிலுள்ள இன்பில்ட் ஆம்பிளிபயர் ஐபோனிலுள்ள அப்ளிகேசன்களை இயக்கும். அதன் இசை இந்த ஸ்டீரியோ மூலம் வெளிவரும்.

எடி&டி வயர்லஸ் வாடிக்கையாளர்கள் மல்டி டாஸ்க்கிங் வாய்ப்புகளை அனுபவிக்க முடியும். நமது ஜிபிஎஸ் அப்ளிகேசன் ஐபோனினி பின்னணியில் இயங்கும்.

ஐரோக்கிலுள்ள பட்டன்கள் மூலம் இதன் ஒலி அளவை சரி செய்ய முடியும். மேலும் நம்மிடம் ஐபோன் இல்லையானால் நானோவை பயன்படுத்த முடியும்.

இந்த ஐரோக்கில் ரேடியோ, சிடி ப்ளேயர் மற்றும் யுஎஸ்பி ஆகியவை இருக்காது. ஆனால் இதிலுள்ள மைக்ரோபோன் நாம் பேசுவதற்கும் அதுபோல் ஐபோனைப் பயன்படுத்துவதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் இது 6 வரிசை அவுட்டுகளைக் கொண்டுள்ளன. இதன் மூலம் ஸ்பீக்கர்கள், துணை ஊபர்கள் மற்றும் 40 வாட் ஆம்பிளிபயரை இணைக்க முடியும்.

இந்த ஐரோக்கில் டபுள் டின் மற்றும் ஒரு டின் பார்மட்டுகள் உள்ளன. விலின்கோ அப்ளிகேசன்களை ஐபோனுக்கு பதிவிறக்கம் செய்யும் போது இந்த ஐ-ராக்மூலம் வாய்ஸிலிருந்து டெக்ஸ் மெயிலுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

தற்போது இந்த ஐரோக்கில் ஐபோட் மற்றும் ஐபோனை மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஐ-ராக்மட்டும் ஐபோன் க்ளப்டு கார் ஸ்டீரியோ டிவைஸை வழங்கவில்லை. மாறாக பயனீரின் அப்ரேடியோ மற்றும் ஆம்ப் ஆப் அமெரிக்காவின் ஒகாரும் இந்த சேவையை வழங்குகின்றன.

ஆனால் இந்த ஜாக்சன் எலக்ட்ரானிக்சின் ஐ-ராக்வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறும் என நம்பலாம். இந்த ஐ-ராக்கார் ஸ்டீரியோவின் விலை ரூ.20,000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot