Home
Music

ஐ ரிவர் அறிமுகப்படுத்தும் புதிய எம்பி-3 ப்ளேயர்!

By Karthikeyan
 ஐ ரிவர் அறிமுகப்படுத்தும் புதிய எம்பி-3 ப்ளேயர்!

ஐ ரிவர் நிறுவனம் பி100 என்ற ஒரு புதிய எம்பி3 ப்ளேயரை களமிறக்குவதில் மிக மும்முரமாக இருக்கிறது. இந்த எம்பி 3 ப்ளேயர் 4ஜிபி மற்றும் 8ஜிபி அளவுகளில் வருகின்றன. இந்த ஏப்ரல் மாதத்திற்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எம்பி 3 ப்ளேயர் பல நல்ல தொழில் நுட்பங்களுடன் வருகிறது. அதாவது இந்த எம்பி 3 ப்ளேயர் 320 x 480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 3.1 இன்ச் அளவில் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டு வருகிறது. பனி போல பளபளக்கும் வெள்ளை நிறத்தில் வருவதால் பார்ப்போரின் மனங்களை மிக எளிதாகக் கவர்ந்து விடும்.

இந்த எம்பி 3 ப்ளேயரில் மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளதால் இதன் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். மேலும் இந்த எம்பி3 ப்ளேயரில் எஸ்ஆர்எஸ் 5.1 சரவுண்டு, யூசர் இக்யூ, வாய்ஸ் ரிக்கார்டிங், பதிவு செய்யும் வசதியுடன் கூடிய எப்எம், 8.5 மணி நேர வீடியோ இயங்கு நேரம், 36 மணி நேர மியூசிக் இயங்கு நேரம், யுஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் பல மொழிகளை சப்போர்ட் செய்யும் வசதி என இந்த இசைப் பேழை பல நவீன தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

இந்த எம்பி3 ப்ளேயரில் தரமான டிஜிட்டல் ஆடியோ உள்ளதால் இதில் சூப்பராக இசையைக் கேட்க முடியும். மேலும் இந்த எம்பி3 ப்ளேயர் எம்பி3, டபுள்யுஎவி, டபுள்யுஎம்எ, எஎஸ்எப்,ஒஜிஜி,ப்ளாக் மற்றும் எபிஇ போன்ற ஆடியோ பைல்களை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் எம்பி4, எவிஐ, டபுள்யுஎம்வி, 3ஜிபி, எஎஸ்எப்,எம்கேவி,டிஎஸ்,எம்2டிஎஸ்,டிபி மற்றும் எம்ஒவி போன்ற வீடியோ பார்மட்டுகளையும் இது சப்போர்ட் செய்கிறது.

அதோடு இந்த இசைப் பேழை இபப் பார்மட்டை சப்போர்ட் செய்வதால் இதில் வாடிக்கையாளர்கள் பிடிஎப், இபுக் மற்றும் டெக்ஸ் பைல்களை வாசிக்க முடியும். மேலும் இதை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும்.

இந்த ஐரிவர் எம்பி3 ப்ளேயரின் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 4ஜிபி ப்ளேயர் ரூ.7500க்கும் 8ஜிபி ப்ளேயர் ரூ.8400க்கும் விற்கப்படும். முதலில் இந்த ப்ளேயர் ஜப்பானில் அறிமுகம் செய்யப்படும். உலகின் மற்ற பகுதிகளில் இந்த இசைப் பேழை விற்கப்படுமா என்ற தெரியவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X