Home
Music

கேமரா வசதியுடன் வரும் புதிய ஆப்பிள் ஐபாட்!

By Karthikeyan
கேமரா வசதியுடன் வரும் புதிய ஆப்பிள் ஐபாட்!

அடுத்து வரும் புதிய ஐபாட் நானோ மாடல் கேமராவைத் தாங்கி வரும் என்பது இப்போது வந்திருக்கும் தகவலாகும். இந்த புதிய ஐபாட்களின் படங்கள் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டன். ஆனால் அதற்குள் அவை ஏராளமான ஆவலையும் அதே நேரத்தில் எதிர்பார்ப்பையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாக்கி இருக்கின்றன. ஆனால் எந்த தகவலும் இன்னும் உறுதியாகவில்லை.

ஆனால் வெளியிடப்பட்டிருக்கும் படங்கள் இந்த புதிய ஐபாட்களின் ஒரு சில உண்மைகளைக் கூறிவிடும். அதன்படி கேமராவிற்காக இந்த ஐபாட்களில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக இதன் பாரம்பரிய டிசைனை ஆப்பிள் கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் என நம்பலாம்.

பழைய ஐபாட் நானோ வீடியோவைக் கொண்டிருந்தது. அந்த ஐபாட் 2010ல் ஒரு புதிய ஆரம்பத்தைத் தொடங்கி வைத்தது. ஆனால் இந்த புதிய ஐபாட் ஒரு சாதாரண ஆடியோ ப்ளேயராக மட்டும் இல்லாமல் ஒரு கேமராவாகவும் செயல்படும்.

இப்போது ஆப்பிளின் சிறிய ஐபாடில் கேமராவும் வந்தால் அதன் தரம் உயர்வாக இருக்குமா என்ற சந்தேகமும் பலர் மனங்களில் எழுகிறது. ஆனால் அதில் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதனால் வரும் புதிய ஐபாட் படு சூப்பராக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X