Home
Music

அட்டகாசமான ஸ்பீக்கர்களை வழங்கும் இன்டெக்ஸ்

By Karthikeyan
அட்டகாசமான ஸ்பீக்கர்களை வழங்கும் இன்டெக்ஸ்

இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் தற்போது மூன்று வகையான 5.1 ஸ்பீக்கர் மாடல்களைக் களமிறக்கி இருக்கிறது. இந்த மூன்று புதிய ஸ்பீக்கர்களுக்கும் ஐடி-402 எஸ்யுஎப், ஐடி-4000 எஸ்யுஎஸப் மற்றும் ஐடி-500பி என்ற பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கின்றன.

அன்பளிப்பு மற்றும் இசை ஆகியவை தீவாளின் முக்கிய அம்சங்களாகும். எனவே இந்த இன்டெகஸ் ஸ்பீக்கர்கள் தீவாளிக்கு சூப்பரான பரிசுகளாக இருக்கும் என்று இன்டெக்சின் தலைமை மேலாளர் விக்ரம் கலியா தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த 3 மாடல்களுமே வீடுகளில் சூப்பரான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த 3 ஸ்பீக்கர்களும் அட்டகாசமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. குறிப்பாக ஐடி-402 எஸ்யுஎப் ஸ்பீக்கர் 500எம்வி மற்றும் 5.1 ப்ரோ லாஜிக் அவுட்புட் மற்றும் 2.1 சேனல் இன்புட் (எயுஎக்ஸ்) போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன. மேலும் இதில் 5 சேட்டிலைட் ஸ்பீக்கர்கள் உள்ளன. அதனால் இது வழங்கும் இசை அமர்க்களமாக இருக்கும். மேலும் இந்த ஸ்பீக்கரின் மேல் பகுதியில் ஒரு எல்இடி டிஸ்ப்ளேயும் உள்ளது.

இந்த ஸ்பீக்கர் எல்லா வகையான எம்பி3 ஆடியோ பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்யும். அதுபோல் இந்த ஸ்பீக்கரை கணினி, நோட்புக், மொபைல் போன், டிவிடி ப்ளேயர், எம்பி3 ப்ளேயர், டிவி, விசிஆர் மற்றும் வாக்மேன் போன்ற எல்லா சாதனங்களிலும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் இதில் உள்ள யுஎஸ்பி மற்றும் எஸ்டி கார்டு மூலம் இந்த ஸ்பீக்கரில் பாடல் கேட்க முடியும். இந்த ஸ்பீக்கர் ரூ.4,999க்கு விற்கப்படும்.

இன்டெக்ஸ் ஐடி-4000 எஸ்யுஎப் ஸ்பீக்கர் உயர்தர ஒலி அமைப்புடன் வருகிறது. குறிப்பாக இதில் 80வாட்ஸ் ஆர்எம்எஸ் ஆம்பிளிபையர் உள்ளதால் இது கணினியைக்கூட ஒரு ஹோம் தியேட்டராக மாற்றிவிடும்.

இந்த ஸ்பீக்கரையும் எல்லாத கணினி மற்றும் மொபைல் சாதனங்களில் மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் இதில் எப்எம் வசதியும் உள்ளது. இந்த ஸ்பீக்கர் சோனிக் பூமின் ஜீரோ டிஸ்டார்ஷன் வசதியுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்பீக்கர் ரூ.4,700க்கு விற்கப்பட இருக்கிறது.

இறுதியாக ஐடி-500பி ஸ்பீக்கர் எல்லா விதமான எம்பி3 பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்யும். அதுபோல் இந்த ஸ்பீக்கரை எல்லா வகையான கணினி, மொபைல் மற்றும் டிவி சாதனங்களில் மிக எளிதாக இணைக்க முடியும். இதில் இருக்கும் ப்ரோலாஜிக் வசதி மற்றும் சோனிக் பூம் ஆகியவை மிகத் துல்லியமான இசையை வழங்கும்.

மேலும் இந்த ஸ்பீக்கரில் எப்எம் ரேடியோ வசதியும் உள்ளது. அதோடு இதில் இருக்கும் எல்இடி டிஸ்ப்ளே மூலம் எல்லா தகவல்களையும் பெற முடியும். இந்த ஸ்பீக்கர் ரூ.3,900க்கு விற்கப்பட இருக்கிறது.

இந்த 3 ஸ்பீக்கர்களும் இந்தியாவில் உள்ள இன்டெக்சின் சில்லறைக் கடைகளில் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X