ஐமெயின்கோ ஸ்பீக்கர்... பாட்டுக்கு பாட்டு, பாதுகாப்புக்கு பாதுகாப்பு!

By Super
|

ஐமெயின்கோ ஸ்பீக்கர்... பாட்டுக்கு பாட்டு, பாதுகாப்புக்கு பாதுகாப்பு!
கணினி அல்லது டேப்லெட்டுகளிலிருந்து தரமான இசையைக் கேட்க வேண்டும் என்றால் ஒன்று ஹெட்செட்டை கணினியில் இணைக்க வேண்டும் அல்லது கணினியில் உள்ள ஸ்பீக்கர் மூலம் பாடல் கேட்க வேண்டும். ஆனால் கணினியில் உள்ள ஸ்பீக்கரின் ஒலி அமைப்பு எப்போதும் குறைவாகவே இருக்கும்.

ஆனால் ஒரு எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர் சிஸ்டத்தை கணினியோடு இணைத்துவிட்டால் அதன் இசை மிகவும் பிரமாதமாக இருக்கும். இதுபோன்ற ஸ்பீக்கர்கள் சந்தையில் ஏராளமாக கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆப்பிளின் ஐபேட் போன்ற டிவைஸ்களுக்கு ஏராளமான ஸ்பீக்கர்கள் வருகின்றன.

இந்த ஸ்பீக்கர்களின் குறைபாடு என்னவென்றால் இந்த ஸ்பீக்கர்களுக்கு என்று தனியாக இடம் வேண்டும். மேலும் பயணங்களின் போது இவற்றை எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வருகிறது ஐமெயின்கோ நிறுவனம். ஆம், இந்நிறுவனம் ஐமெயின்கோ எக்ஸ்பி என்ற மிக எளிமையான ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த ஐமெயின்கோ எக்ஸ்பியின் சிறப்புகள் பிரமாதமாக உள்ளன. இது 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஸ்பீக்கர் சிஸ்டம் ஆகும். இது டிவைசுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. மேலும் இது ஒரு எளிமையான சிஸ்டம் ஆகும். அதுபோல் இந்த சிஸ்டம் ஒரு துணை ஆடியோ ஜாக்கையும் கொண்டுள்ளது.

ஐமெயின்கோ எக்ஸ்பி டிவைசை பாதுகாக்கக்கூடிய ஒரு பெட்டியாகவும் அதே நேரத்தில் ஒரு போர்ட்டபுள் சிஸ்டமாகவும் இருக்கிறது. இந்த சிஸ்டத்தை ஐபேட் மற்றும் ஐபேட்-2 ஆகியவற்றுடன் மிக எளிதாக இணைக்க முடியும். இதன் ஸ்பீக்கர்கள் பெட்டியில் உள்ளதால் இந்த பெட்டிக்குள் ஐபேடை மிக எளிதாக வைக்க முடியும். அதனால் இதை எடுத்துச் செல்வதும் மிக எளிதாக இருக்கும்.

இந்த ஸ்பீக்கர் பெட்டி துணை ஸ்டேண்டையும் கொண்டிருக்கிறது. இந்த ஐபேடுடன் இணைத்து மேசையில் நிற்க வைக்கவும் முடியும். அதுபோல் இது சுவர் சார்ஜர் மற்றும் இரண்டு 3.5 மிமீ ஆடியோ ஜாக்குகளையும் கொண்டுள்ளது. இதன் ஒரு ஜாக் மூலம் ஐபேடையும் இன்னொரு ஜாக்கில் ஹெட்போனையும் இணைக்க முடியும்.

8 முதல் 10 மணி நேரம் இதை சார்ஜ் செய்தால் இதன் பேட்டரி முழு மின் திறனைப் பெற்றுவிடும். இந்த முழு மின் திறன் பெற்ற பேட்டரி 6 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும். இந்த ஸ்பீக்கர் மிக துல்லியமான இசையையும் வழங்கும். இதன் விலையைப் பார்த்தால் இது ரூ.6,000ற்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X