Home
Music

சாம்சங் கேலக்ஸி டேப்லெட்டுக்கு புதிய ஆடியோ டோக்கிங் ஸ்டேஷன்!

By Super
சாம்சங் கேலக்ஸி டேப்லெட்டுக்கு புதிய ஆடியோ டோக்கிங் ஸ்டேஷன்!

டேப்லெட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அவற்றிற்கான அக்சஸரிகளும் பெருகிக்கொண்டே வருகின்றன. கீபோர்டு முதல் ஹைபை டோக்கிங் ஸ்டேசன்கள் வரையிலான எல்லா அக்சஸரிகளையும் டேப்லெட்டுகளிலிருந்து தனியாக பிரித்து எடுக்க முடியும்.

ஆனால் இதில் ஆடியோ டோக்கிங் ஸ்டேசன் எல்லா காலத்திலும் பிரபலமாக இருக்கிறது. இந்த ஆடியோ டோக்கிங் இருந்தால் டேப்லெட்டிலிருந்து தரமான இசையைக் கேட்க முடியும்.

தற்போது ஐலுவ் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி டேப்பிற்காக ஐஎஸ்எம்524 ஆர்ட் ஸ்டேசன் ப்ரோ என்ற புதிய ஆடியோ டோக் ஸ்டேசனை அறிமுகப்படுத்துகிறது. கேலக்ஸி டேப்பிற்கான முதல் ஆடியோ டோக் சிஸ்டம் இதுவாகும்.

இந்த ஐஎஸ்எம்524 ஆர்ட் ஸ்டேசன் ப்ரோவின் சிறப்புகள் கவரும் விதத்தில் மிக பக்காவாக உள்ளன. அதாவது இதில் ஜே அவுரா ஒலி தொழில் நுட்பம் உள்ளது. இதில் ரிமோட் வசதியும் உள்ளது. அதுபோல் 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் உள்ளது. இதை படுக்கை வசமாகவோ அல்லது மேலும் கீழுமாகவோ வைக்க முடியும். மேலும் இதில் இன்டக்ரேட்டச் மேக்னட்டும் உள்ளது.

இந்த ஸ்பீக்கரின் அடிப்பாகம் பெரிதாக உள்ளதால் இதன் எடை அதிகமாக இருக்கிறது. இதன் அடிப்பாகம் பல ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இந்த டோக் மீதுள்ள ஆர்ம் மீது டேப்லெட்டை வைக்க முடியும். இந்த ஆடியோ டோக்கிங் சிஸ்டத்தில் பாடல்கள் கேட்கும்போது தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்த டோக்கிங் சிஸ்டம் சாம்சங் கேலக்ஸி டேப் 8.9இன் மற்றும் 10.1 இன்ச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த டோக் ஐஆர் ரிமோட் கண்ட்ரோல் கொண்டு வருகிறது.

இந்த டோக்கிலுள்ள ஸ்பீக்கர்கள் மிக அபாரமாக உள்ளன. இதன் ஒலி அமைப்பும் மிக பக்காவாக உள்ளது. இதன் பேஸ் இசை மிகவும் சூப்பராக உள்ளது. இந்த டோக் உண்மையாகவே ஒரு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக இருக்கும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X