தேனினும் இனிய இசை வழங்கும் ஐப்ராக்ஸ் ஹெட்போன்!

ஐப்ரோக்ஸ் புதியதாக சிஎஸ்40எஸ் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஹெட்போன்கள் பார்ப்பதற்கு பழமையாகத் தெரிந்தாலும் பல புதுமையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இதில் நீண்ட நேரம் பாடல்கள் கேட்டாலும் காதுகளில் வலி இருக்காது. மேலும் இந்த ஹெட்போனின் இயர் பட்ஸ்களும் மிகவும் நெகிழ்வு தன்மையுடன் உள்ளன.
இந்த ஹெட்போனை காதுகளைச் சுற்றி மிகச் சரியாக அணிந்து கொள்ளக்கூடிய வகையில் இயர் பட்சுளை ஐப்ராக்ஸ் வடிவமைத்திருக்கிறது. இதன் எடை மிக குறைவாக இருப்பதால் இதை அணிவது மிக எளிதாக இருக்கும்.
இந்த ஐப்ரோக்ஸ் சிஎஸ்40எஸ் ஹெட்போனின் ஆடியோ தரம் மயக்கிவிடும் அளவில் உள்ளது. இந்த ஹெட்போனை ஐபாட் மற்றும் லேப்டாப்புகளில் மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் இதில் மிகத் துல்லியமான இசை நோட்டுகளைக் கூட கேட்க முடியும்.
இதில் உள்ள ஐப்ரோக்ஸ் டிம்பிரே ப்ரோ இயர் பட்சுகள் மிகத் தரமான இசையை வழங்குகின்றன. இந்த இயர்பட்சில் பலவிதமான இசை ப்ரீக்வனசிகளை துல்லியமாக கேட்க முடியும்.
இந்த இயர் பட்ஸ் 3 வகையான அளவுகளில் இயர் பட்சுகளைக் கொண்டு வருவதால் நமது காதுகளுக்கப் பொருந்தக் கூடிய இயர் பட்சைத் தேர்ந்து கொள்ளலாம். இது வெளியிலிருந்து வரும் இரைச்சலையும் இந்த இயர் பட்ஸ் தடுத்துவிடும். அதனால் சத்தமான இடத்தில் இந்த ஹெட்போன் மூலம் பாடல் கேட்டாலும் இதன் ஒலி அமைப்பை கூட்டத் தேவையில்லை.
ஐப்ராக்சின் டிம்ப்ரே ப்ரோ இயர் பட்ஸின் விலை ரூ.2570 ஆகும். ஆனால் மைக்ரோபோன் இல்லாமல் இதை ரூ.2056க்கு வாங்கலாம். இதன் சிஎஸ்40எஸ் ஹெட்போன் ரூ.2056க்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications