Home
Music

ரூ.890 விலையில் புதிய லேப்டாப் ஸ்பீக்கர்!

By Super
ரூ.890 விலையில் புதிய லேப்டாப் ஸ்பீக்கர்!

லேப்டாப்புகளுக்கான புதிய போர்ட்டபிள் ஸ்பீக்கர் சிஸ்டத்தை ஐபால் அறிமுப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்பீக்கர்கள் விரைவில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது.

லேப்டாப்புகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்களில் இசை கேட்கும்போது அவ்வளவு துல்லியமாக இருப்பதில்லை. எனவே, லேப்டாப் பயன்படுத்துவோருக்கு போர்ட்டபிள் ஸ்பீக்கர் சிஸ்டம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

இதனால், மார்க்கெட்டில் லேப்டாப்புகளுக்கு மலிவான விலையில் ரக ரகமாய் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இவை லேப்டாப்பில் பணிகளை செய்து கொண்டே அற்புதமான இசையை கேட்பதற்கு துணைபுரிகின்றன.

லேப்டாப்புகளுக்கான ஸ்பீக்கர்களை தயாரித்து வழங்குவதில் ஐபால் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்த வரிசையில் தற்போது ஐபால் மெலடி பார் மற்றும் ஐபால் டிரம் என்ற பெயரில் 2 புதிய லேப்டாப் ஸ்பீக்கர்களை ஐபால் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய ஸ்பீக்கர்கள் மிகவும் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைப்பதற்கு எளிதாகவும், ஆப்பரேட் செய்வதற்கு சிரமமில்லாமலும் இருக்கிறது.

மேலும், இந்த ஸ்பீக்கரை லேப்டாப் மானிட்டரின் பக்கவாட்டிலோ அல்லது திரையின் மேலோ பொருத்திக்கொள்ளும் வகையில் கிளிப் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஐபால் டிரம் ஸ்பீக்கர் சிஸ்டம் இந்திய பாரம்பரிய இசைக்கருவியான தபேலா வடிவமைப்பை ஒத்திருக்கிறது. எனவேதான் இதற்கு ஐபால் டிரம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது பிளக் அண்ட் பிளே சாதனம் என்பதால் இதில் இசை கேட்பதற்கு துணை சாதனங்கள் எதுவும் தேவையில்லை.

இதற்கு மின்சார இணைப்புக்காக கூடுதல் கேபிள்கள் இல்லதாதது மிக சவுகரியமாக உள்ளது. இந்த ஸ்பீக்கர்களை எம்பி3 பிளேயர் மற்றும் ஐபாட் ஆகியவற்றுடன் இணைத்து பாடல்கள் கேட்க முடியும்.

ஐபால் மெலடி ரூ.890 விலையிலும், ஐபால் டிரம் ரூ.990 விலையிலும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X