Home
Music

புத்தாண்டில் மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் புதிய ஹெட்செட்!

By Super
புத்தாண்டில் மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் புதிய ஹெட்செட்!

2011 ஆண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. எனவே, புத்தாண்டு பிறப்பையொட்டி பல நிறுவனங்கள் ஏராளமான ஹெட்செட்டுகளை களமிறக்க இருக்கின்றன. மேலும், வாடிக்கையாளர்களும் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்படி எதிர்பார்ப்போடு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஹெட்செட்டை அறிமுகப்படுத்துகிறது மோட்டோரோலா.

மோட்டோரோலா எச்எக்ஸ்550 என்ற பெயரில் இந்த புதிய ப்ளூடூத் ஹெட்செட் மார்க்கெட்டிற்கு வருகிறது. மோட்டோரோலா எச்எக்ஸ்550 ஹெட்செட் மிகவும் எடை குறைந்த ஒன்றாகும். மேலும் இதில் உள்ள கொக்கிகள் மூலம் இந்த ஹெட்போனை காதுகளில் பொருத்திக் கொள்ளலாம்.

இந்த ஹெட்செட்டிலிருந்து வரும் இசை மற்றும் ஒலி மிகவும் துல்லியமாக இருக்கும். அதே நேரத்தில் மிகவும் எளிமையாக இருக்கும். ஏனெனில் இதி்ல் கிரிஸ்டல் டாக் தொழில் நுட்பம் உள்ளது. அதனால் அழைப்பு வரும் போது அந்த அழைப்பை எடுத்து சரியாக பேச முடியும்.

மேலும் புதிய ப்ளூடூத் வயர்லஸ் தொழில் நுட்பம் இதில் உள்ளதால் இதில் குரல் ஒலி மிக துல்லியமாக இருக்கும். இதன் ப்ளூடுத் வி3.0 இணைப்பு 300 அடி வரை இருக்கும். மேலும் இந்த ஹெட்செட் வெளியிலிருந்து வரும் இரைச்சலைத் தடுக்கும் அதே நேரத்தில் இதில் எதிரொலியும் இருக்காது.

இந்த மோட்டோரோலா ஹெட்செட்டில் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் ரிசார்ஜ் செய்யக்கூடிய போட்டரி உள்ளது. இந்த பேட்டரி 9 மணி நேரம் தாங்கும் சக்தியை பெற்றுள்ளது. அதே நேரம் இது 16 நாள்கள் ஸ்டான்ட் பை நேரத்தையும் கொண்டுள்ளது. அந்த அளவிற்கு அதன் மின் திறன் அபாரமாக உள்ளது.

இந்த ஹெட்செட் ரேபிட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளதால் இதை மிக விரைவாக சார்ஜ் செய்ய முடியும். ஆனால் இந்த முறையில் சார்ஜ் செய்தால் இதன் இயங்கு நேரம் 4.5 மணி நேரமாகும்.

வாடிக்கையாளர் மோட்டோஸ்பீக் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் வைத்திருந்தால் இந்த ஹெட்செட் மூலம் செய்திகளையும் தனது குரலையும் அனுப்ப முடியும். இதில் 3 இயர் பீஸ்கள் உள்ளன. இதில் தானாகவே ஒலி அளவை மாற்றக்கூடிய வசதியும் உள்ளது.

இந்த மோட்டோரோலா ஹெட்செட்டில் 2 மைக்ரோ போன்கள் மற்றும் யுனிவர்சல் டிவைஸ் கம்பாட்டிபிலிட்டி மற்றும் இன்டகிரேட்டட் ஈசி பேர் வசதியும் உள்ளதால் இதை எல்லாவித ப்ளூடூத் டிவைஸ்களோடும் இணைக்க முடியும். இதன் விலை ரூ.3,500 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X