அருமையான பேட்டரி பேக்கப்புடன் எச்டிசி போர்ட்டபிள் ஸ்பீக்கர்!

மொபைல் தயாரிப்பில் எச்டிசி நிறுவனம் சிறந்த நற்பெயரைப் பெற்றுள்ளது. குறிப்பாக தரத்திற்கும் உயர் செயல்திறனுக்கும் எச்டிசி எப்போதும் முன்னனியில் இருந்து வருகிறது.
தற்போது எச்டிசி ஸ்மார்ட்போன்களுக்கான் அக்சஸரிகளைத் தயாரிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது எச்டிசி புதிய கான்பரன்ஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஒரு ப்ளூடூத் வசதி கொண்ட போர்ட்டபுள் ஸ்பீக்கர் ஆகும். இதன் பெயர் எச்டிசி பிஎஸ் பி100 ஆகும். இதை மிகவும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
இந்த எச்டிசி பிஎஸ் பி100 ப்ளூடூத் ஸ்பீக்கர் மிகவும் பக்காவான ஸ்டைலில் உள்ளது. இது உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரே நேரத்தில் 2 ப்ளூடூத் டிவைஸ்களுடன் இணைக்க முடியும்.
இந்த எச்டிசி ப்ளூடூத் ஸ்பீக்கரின் சிறப்புகளைப் பார்த்தால் அது முதலில் உறுதியான உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவமாக பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. இது 200 - 300 மணி நேர ஸ்டான்ட் பை நேரத்தை கொண்டுள்ளது. அ
இது 8 மணி நேர பேக்கப்பை கொடுக்கும். இதன் கான்பரன்ஸ் உரையாடல் நேரம் 10 மணி நேரம் ஆகும். இதன் ட்ரூ வயர்லஸ் ஸ்டீரியோ இயங்கு நேரம் 6 மணி நேரம் ஆகும். இதன் சாதாரண உரையாடல் நேரம் 12 மணி நேரம் ஆகும். இந்த எச்டிசி பிஎஸ் பி100 ப்ளூடூத் கன்பரன்ஸ் ஸ்பீக்கரின் விலை ரூ.6,000 ஆகும்.


Click it and Unblock the Notifications