Home
Music

சென்ஹைசர் வழங்கும் குறைந்த எடை ப்ளூடூத் ஹெட்செட்

By Super
சென்ஹைசர் வழங்கும் குறைந்த எடை ப்ளூடூத் ஹெட்செட்

பல நிறுவனங்கள் இப்போது ஏராளமான ப்ளூடூத் ஹெட்செட்டுகளை வழங்குகின்றன. ஆனால் அவற்றின் தரம் மற்றும் ஆயுள் காலம் இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது

இந்த குறையைப் போக்குவதற்காகவே சென்ஹைசர் நிறுவனம் விஎம்எக்ஸ் 200 என்ற புதிய உயர்தர ப்ளூடூத் ஹெட்செட்டை வழங்குகிறது. இந்த நிறுவனத்தைப் பற்றி கூற வேண்டுமென்றால் சென்ஹைசர் கடந்த 50 ஆண்டுகளாக இசைப் பேழை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் ப்ளூடூத் தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகிறது. அதனால் அந்நிறுவனத்தின் இந்த புதிய ஹெட்செட் மிக சிறப்பாகவே இருக்கும்.

சென்ஹைசர் விஎம்எக்ஸ் 200 இரண்டு இன்பில்ட் மைக்ரோபோன்களைக் கொண்டு வருகிறது. இதனால் இரைச்சல் மிகுந்த இடத்தில் இந்த ஹெட்செட்டில் பாடல் கேட்டாலும் வெளிப்புற சத்தம் இல்லாமல் நிம்மதியாக தெளிவாக பாடல் கேட்கலாம்.

சென்ஹைசர் விஎம்எக்ஸ் 200 உயர்தர ஸ்பீக்கர்களையும் வழங்குகிறது. அதனால் இதன் ஒலி மிகத் துல்லியமாக இருக்கும். இதன் டைனமிக் ஸ்பீக்கர்கல் நியோடிமியும் மேக்னட் கொண்டிருப்பதால் இதன் செயல் திறன் மிக அட்டகாசமாக இருக்கும்.

மேலும் இந்த டிவைசின் மொத்த எடை 10 கிராம் மட்டுமே. அதனால் இதை எடுத்துச் செல்வது மிக எளிதாக இருக்கும்.

சென்ஹைசர் விஎம்எக்ஸ் 200ன் பேட்டரி திறன் அபாரமானது. அதாவது 6 மணி நேரம் தொடர்ந்து இந்த ஹெட்செட்டை பயன்படுத்தினாலும் இதன் பேட்டரி தாங்கும் வலிமை கொண்டது. இதன் ஸ்டேன் பை நேரம் 10 நாட்களாகும்.

2 மணி நேரத்தில் இது முழு சார்ஜை பெற்று விடும். மேலும் இது ப்ளூடூத் 3.0 + இடிஆர் கொணடுள்ளது. அதனால் இது எச்எஸ்பி + எச்எப்பி போன்றவற்றை சப்போர்ட் செய்யும். மேலும் இது அடாப்டர் மற்றும் யுஎஸ்பி கேபிளையும் வழங்குகிறது.

சென்ஹைசர் விஎம்எக்ஸ் 200ஐ எந்த ஒரு ப்ளூடூத் டிஜிட்டல் டிவைசோடும் மிக எளிதாக இணைக்க முடியும். இதை நமது காதுகளில் மிக எளிதாக பொருத்த முடியும். இதன் விலை மலிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X