துல்லியமான இசையை வழங்கும் புதிய மியூசிக் சாதனம்

காரில் போகும்போது இதுவரை கேட்டிராத துல்லியத்தில் இந்த சாதனம் மூலம் இசையை கேட்க முடியும். இந்த ஜேபிஎல் எம்எஸ்-2 இசை பேழையை காரில் மட்டுமல்ல.
3மிமீ விட்டம் கொண்ட ஆக்ஸ் போர்ட் கொண்ட ஆடியோ சிஸ்டங்களில் இந்த சாதனத்தை இணைத்துகொள்ள முடியும். காரில் மட்டுமல்ல எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த சாதனத்தை ஆடியோ சிஸ்டங்களுடன் இணைத்து இசையை கேட்டு ரசிக்கலாம்.
காரிலிருக்கும் ஸ்பீக்கர் மூலம் இது தரமான தெளிவான டிஜிட்டல் இசையை நமக்கு வழங்குகிறது. ஜேபிஎல் எம்எஸ்-2 இசை பேழை ஒரு போர்ட்டபுள் ஆகும். இதன் எடையும் மிகக் குறைவே. இதன் டிஜிட்டல் சிக்னல் தரமான க்ரிஸ்டல் க்ளியர் ஒலியைத் தருகிறது.
புதிய தொழில் நுட்பமான டிஎஸ்பி இந்த இசைப் பேழையின் ஈக்குவலைசேஷனை கவனித்துக் கொள்கிறது. அது போல் இந்த டிஎஸ்பி தரமான ஒலியையும் வழங்குகிறது. மேலும் இது ஒலி அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த ஜேபிஎல் எம்எஸ்-2 இசை பேழையில் பேஸ், ட்ரேபிள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி இல்லை.
இதன் எடை 90.7 கிராம் மட்டுமே. மேலும் இதில் இன்புட் மற்றும் அவுட்பட் கேபிள்களும் இணைப்புகளுக்காக உள்ளன. இதை நாம் வீட்டில பயன்படுத்தினால் இதற்கு பேட்டரி தேவைப்படும். இதற்கு 6 வோல்ட் டிசி மின்திறன் இருந்தால் போதுமானது.
ஜேபிஎல் எம்எஸ்-2 இசை பேழையின் விலை ரூ.11,000 ஆகும். மேலும் இது விரைவில் சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார் வைத்திருப்பவர்கள் இந்த சாதனத்தை கார்களில் பொருத்தி இனிய இசையைக் கேட்டு மகிழலாம்.


Click it and Unblock the Notifications