அற்புத இசையை வழங்க வரும் புதிய ஹெட்செட்!

Posted By: Karthikeyan

அற்புத இசையை வழங்க வரும் புதிய ஹெட்செட்!

சிறந்த ஆடியோ பேழைகளை வழங்கும் ஹெர்மன் நிறுவனம் சமீபத்தில் ஒரு அட்டகாசமான ஹெட்செட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய ஹெட்செட்டிற்கு ஹெர்மன் கார்டன் சிஎல் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மிகுந்த தரத்துடன் வரும் இந்த ஹெட்செட் பல நவீன தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

குறிப்பாக இந்த ஹெட்போன் மலிவு விலையில் வருகிறது. அதாவது இந்த ஹெட்போன் ரூ.2,300க்கு விற்கப்படுகிறது. விலை குறைவாக இருந்தாலும் மிகத் துல்லியமான ஆடியோவை அள்ளித் தருகிறது. இந்த ஹெட்போனை ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்புகள் மற்றும் கணினிகள் ஆகியவற்றில் மிக எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.

இந்த ஹெட்செட்டில் 40எம்எம் நியோடியம் டைனாமிக் ட்ரைவர்கள் மற்றும் 119டிபி சென்சிட்டிவிட்டி ஆகியவை உள்ளதால் இதன் தரத்திற்கு உத்திரவாதம் வழங்கலாம்.

இந்த கார்டன் ஹெட்செட்டை தலைக்கு மேல் அணிந்து கொள்ளலாம். இது காதுகளில் கச்சிதமாக அமர்ந்து கொள்ளும். இந்த இயர் கப்புகள் பஞ்சினால் செய்யப்பட்டுள்ளதால் காதுகளுக்கு இது மெத்தென்று இருக்கும். அதானால் காதுகளுக்கு எரிச்சலை உண்டாக்காது.

இந்த ஹெட்செட்டில் உள்ள பேஸ் இசை மிக அபாரமாக இருக்கும். குறிப்பாக ஹப்-ஹாப், ஜாஸ், ராக் மற்றும் பாப் போன்ற இசைகளை இந்த ஹெட்செட்டில் மிக அருமையாக ரசித்து கேட்க முடியும். அதோடு இந்த ஹெட்செட் பார்ப்பதற்கும் மிக அழகாக இருக்கிறது.

இந்த புதிய ஹெட்செட் இந்திய இளைஞர்களைக் பெரிதும் கவரும் என்று ஹெர்மன் நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot