Home
Music

8 மணிநேரம் பேக்கப் தரும் பேட்டரியுடன் புதிய ஹெட்செட்

By Super
8 மணிநேரம் பேக்கப் தரும் பேட்டரியுடன் புதிய ஹெட்செட்

ஜப்ரா நிறுவனம் தமது ஆடியோ கருவிகள் தயாரிப்பின் மூலம் மக்களிடையே நற்பெயரைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஜப்ரா இப்போது ப்ளூடூத் ஹெட்செட்டுகளைத் தயாரிப்பதிலும் அதிக அக்கறை காட்டி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஜப்ரா ஹலோ 2 என்ற புதிய ப்ளூடூத் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய ஹெட்செட் பல சிறப்பு அம்சங்களுடன் குறிப்பாக எஎம்3டி வெர்ச்சுவல் ஒலி அமைப்பு மற்றும் 2.0 பேஸ் ஒலி அமைப்பும் கொண்டு வருகிறது.

ஹலோ 2 ஹெட்செட் டூவல் மைக்ரோபோன்களுடன் இரைச்சல் தடுப்பு தொழில் நுட்பத்துடன் வருகிறது. அதோடு இந்த ஹெட்செட் மல்டி-யூஸ் தொழில் நுட்பம் கொண்டிருப்பதால் இதை ஒரே நேரத்தில் 2 ப்ளூடூத் டிவைஸ்களோடு இணைக்க முடியும்.

மேலும் இந்த ஹெட்செட்டை டச் சென்சார்கள் வழியாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். இந்த ஹெட்செட்டில் தொடர்ச்சியாக 8 மணி நேரம் பாடல் கேட்க முடியும். இது 13 நாட்கள் ஸ்டான்ட் பை பேட்டரி பேக்கப்பை தரும்.

இந்த ஹலோ ஹெட்செட்டின் ஆபரேட்டிங் ரேஞ்ச் 10 மீட்டர்களாகும். இது 2 மணி நேரத்திற்குள் இந்த ஹெட்செட் முழு சார்ஜ் அடைந்து விடும். இதன் எடை 80 கிராம் மட்டுமே. இது 32மிமீ டைனமிக் ஸ்பீக்கர்களுடன் வருவதால் அபாரமான இசையைக் கேட்கலாம்.

இதன் ஏசி பவர் விநியோகம் 100-240 வாட்ஸ் ஆகும். மேலும் ஒலி அமைப்பு கட்டுப்பாடு, ட்ராக்கை மாற்றுதல் மற்றும் அழைப்புகளை எடுத்தல் போன்ற அத்தனை வசதிகளையும் இந்த ஹெட்செட் கொண்டுள்ளது. மேலும் இது ஓர் ஆண்டு உத்திரவாதத்துடன் வருகிறது.

ஹலோ 2 ஹெட்செட் எ2டிபி மற்றும் டிஎஸ்பி தொழில் நுட்பம் கொண்டு வருவதால் இதன் ஒலி அமைப்பிற்கு உத்திரவாதம் தர முடியும். மேலும் இது பார்ப்பதற்கு மிக ஸ்டைலாக இருக்கிறது.

அடுத்ததாக இது ஜப்ரா ஸ்டேடஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளதால் இதன் இணைப்பின் விவரத்தை அறிந்து கொள்ளலாம். இந்த ஹெட்செட் ப்ளூடூத் 3.0 இடிஆர் மற்றும் இஎஸ்சிஒ தொழில் நுட்பங்களையும் கொண்டுள்ளது. இதன் விலை பற்றி அதிகாரப் பூர்வமான தகவல்கள் இன்னும் வரவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X