இசைக்காகவே உருவாகும் ஐபோனுக்கான கிட்டார் மாடல் 2

By Super
|
இசைக்காகவே உருவாகும் ஐபோனுக்கான கிட்டார் மாடல் 2
ஐபோனில் கிடாரை இணைத்துக்கொள்ளும் வகையில் புதிய ஆடியோ இன்புட் சாதனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிட்டார் ஜாக் மாடல் 2 என்ற பெயரில் வந்துள்ள இந்த சாதனம் ஐபோன் வைத்திருக்கும் இசைப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது. இசை அமைப்பாளர்கள் இசையை உருவாக்குகின்றனர் என்றால் அந்த இசைக்கு உயிரைக் கொடுப்பது தொழில் நுட்பம் ஆகும்.

கிட்டார் ஜாக் மாடல் 2 ஒரு ஆடியோ இன்புட் டிவைஸ் ஆகும். இதன் மூலம் கிடாரிலிருந்து வெளிவரும் இசையை இந்த ஆடியோ இன்புட் சாதனம் வழியாக ஐபோனில் ரிக்கார்டிங் செய்ய முடியும். இந்த சாதனம் 1/4 இன்ச் ஸ்டீரியோ மைக்/லைன் இன்புட்டைக் கொண்டிருக்கிறது. இது ஸ்லீக் அலுமினியம் உரையைக் கொண்டிருப்பதால் இது பார்ப்பதற்கு மிக பக்காவாக இருக்கிறது.

இதன் தொடர்ச்சியான 60டிபி கட்டுப்பாடு மூலம் எந்த ஒரு ஐபோன் டோக்கிலும் இதை இணைக்க முடியும். இந்த மாடல் 2 இண்புட் மற்றும் ரிக்கார்டிங்கிற்காக கண்ட்ரோல் பேனல் மிரியட் வசதியை வழங்குகிறது. இதன் ஆடியோ இன்டர்பேஸ் மூலம் நாம் டெய்லர்இக்யு, கிட்டார் டோன், போர்ட்ராக் மற்றும் ஸ்டூடியோ ட்ராக் இண்புட் மர்றும் அவுட்புட் வசதிகள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியும்.

இந்த கிட்டார் ஜாக் மாடல் 2 குரலையும் இசையையும் நன்றாக ரிக்கார்ட் செய்யும் வசதி கொண்டது. மேலும் இது ஹெட்போனையும் வழங்குகிறது. இதன் விலை 149 அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,000க்குக் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X