தண்ணீருக்குள்ளும் இசை வழங்கும் வாட்டர்புரூப் எம்பி3 ப்ளேயர்

அதுபோல் ஐடி கன்சல்ட்டிங் சேவையையும் வழங்குகின்றனர். குறிப்பாக அவர்கள் புதிதாக ஜீக்ஸ்டப்4யு.காம் மூலம் ஜிஎஸ்4யு வாட்டர்ப்ரூப் எம்பி3 ப்ளேயரையும் மற்றும் ரேடியோவையும் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக இது நீர் தடுப்பு வசதி கொண்டிருப்பதால் இது பெருமளவில் வாடிக்கையாளர்களைச் சென்றடையும் என நம்பலாம்.
ஜிஎஸ்4யு வாட்டர்ப்ரூப் எம்பி3 ப்ளேயர் ஐபிX7ன் தரச் சான்றிதழ் பெற்றிருக்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால் நாம் குளித்துக் கொண்டிருக்கும் போது கூட நமது ப்ளேயருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் நாம் தரமான இசையைக் கேட்க முடியும். குறிப்பாக நீச்சல் குளத்தில் கூட நாம் இதைப் பயன்படுத்த முடியும்.
ஜிஎஸ்4யு வாட்டர்ப்ரூப் எம்பி3 ப்ளேயர் ஒரு வட்ட வடிவ பந்தைப் போல் இருக்கிறது. இதன் மேல் மூடியைத் திறந்தால் அதில் யுஎஸ்பி மெமரி டிவைஸ் அல்லது எஸ்டி கார்ட் இருக்கும். அவற்றில் நமது மீயூசிக் பொருளடக்கம் இருக்கும். எப்எம் ரேடியோ 76.0 முதல் 108 எம்ஹெர்ட்ஸ் ப்ரீக்வன்சி வரை சப்போர்ட் செய்யும்.
இதன் யுஎஸ்பி அல்லது எஸ்டி கார்டு 32ஜிபி வரை சப்போர்ட் செய்யும். இந்த ப்ளேயர் மூலம் நாம் எப்எம் ரேடியோவையும் கேட்க முடியும். அதே நேரத்தில் நாம் சேமித்து வைத்திருக்கும் இசையையும் கேட்க முடியும்.
ஜிஎஸ்4யு வாட்டர்ப்ரூப் எம்பி3 ப்ளேயரின் உயரம் 165 மிமீ, அகலம் 165மிமீ, நீளம் 160 மிமீ ஆகும். இது ஒரு போர்ட்டபுள் ப்ளேயர் ஆகும். அதனால் இதை எளிதில் தூக்கிச் செல்லலாம். இது தரமான் x6 எஎ பேட்டரிகளைக் கொண்டுள்ளது.
இந்த பேட்டரிகள் 16 மணி நேர சக்தியைத் தருகின்றன. இதன் யுஎஸ்பி 9 மணி நேர போக்கப்பை வழங்குகின்றது. ஜிஎஸ்4யு வாட்டர்ப்ரூப் எம்பி3 ப்ளேயர் ரூ.8,300க்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications