ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் டிவி, ப்ரிட்ஜ்!

By Karthikeyan
|
ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் டிவி, ப்ரிட்ஜ்!

கடந்த சில ஆண்டுகளாக ஆன்ட்ராய்டு இயங்கதளத்தில் இயங்கக்கூடிய டேப்லெட்டுகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்புகள் ஆகியவை படை எடுத்து வந்தன. அவை மக்களின் மனதை அமோகமாக கொள்ளை கொண்டன.

இப்போது வந்திருக்கும் புதிய செய்தி என்னவென்றால் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய புதிய குளிர்சாதனப் பெட்டி வர இருக்கிறது என்பதாகும். அதாவது இந்த ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தின் மூலம் டிவியிலிருந்து குளிர்சாதனப் பெட்டி நெட்வொர்க்கால் இணைக்கப்படும்.

கூகுளின் தலைமை இயக்குனர் எரிக் ஷ்மிட் இன்று லாஸ் வேகாசில் நடந்த மின்னனு கண்காட்சியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்மார்ட் போன்கள் நமது அன்றாட வாழக்கையின் முக்கிய அங்கமாகிவிட்டன. அதன் மூலம் நமக்குத் தேவையான எல்லாவிதமான தகவல்களையும் வீட்டிலிருந்தே அறிய முடிகிறது.

குறிப்பாக வைபை இணைப்பு மூலம் இவை சாத்தியமாகிறது. மேலும் இந்த வைபை மூலம் வீட்டிலுள்ள மின் விளக்குகள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது. தற்போது கூகுளின் புதிய திட்டம் என்னவென்றால் மொபைல் டிவைஸ்களிலிருந்து தங்களது கவனத்தை விட்டுவிட்டு இப்போது வீட்டு உபயோக பொருள்களை நெட்வொர்க்கால் இணைக்க வேண்டும் என்பதில் கூகுள் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறும் போது கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தை தமக்கு எற்ற வகையில் தங்களது டிவைஸ்களில் பயன்படுத்தும் விதமாக அனைவருக்கும் பொதுவாக கூகுள் வைத்திருக்கிறது. அதனால் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வீடுகளில் இருக்கும் டிவி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் ஆன்ட்ராய்டு தொழில் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டிவியை எல்ஜி அறிமுகப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, சாம்சங் உள்ளிட்ட தோழமை நிறுவனங்கள் ஆன்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்ய உள்ளன. ஆன்ட்ராய்டு டிவியில் வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் உள்ளிட்ட இதர வசதிகளையும் பெற முடியும்.

இதேபோன்று, ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ப்ரிட்ஜையும் அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த ஆன்ட்ராய்டு குளிர்சாதன பெட்டிகள் விரைவில் சந்தைக்கு வரும் என்று எரிக் கூறுகிறார். நாமும் காத்திருப்போம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X