Home
Music

சுற்றுச் சூலுக்கு உகந்த அம்சங்களுடன் புதிய ஹெட்போன்!

By Super

{image-noisezero-0+.png tamil.gizbot.com}சுற்றுச் சூழலுக்கு உகந்த ஹெட்போன்களை வழங்குவதில் எல்லா நிறுவனங்களும் முனைப்புடன் இருக்கின்றன. ஏனெனில் சுற்றுச் சூழலுக்கு உக்ந்த நவீன கருவிகள் மக்கள் மனதை கவர்ந்து வருகின்றன.

உலக அளவில் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத தயாரிப்புகள் மிக அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இஒபிஎஸ் நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற நாய்ஸ் ஸீரோ ஒ+ என்ற புதிய ஹெட்போனை அறிமுகப்படுத்துகிறது.

நாய்ஸ் ஸீரோ ஒ+ என்ற ஹெட்போன் மிகத் தரமான இசையை வழங்குகிறது. இதில், புதுப்பிக்கத்தக்க உதிரிபாகங்களை கொண்டு இந்த ஹெட்போன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

நாய்ஸ் ஸீரோ ஒ+ ஹெட்போன் ஸ்டெய்ன்லஸ் இரும்பு மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல் கார்ன்ஸ்ட்ராட்ச் பயோ ப்ளாஸ்டிக்கையும் இதில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இதன் அடுத்த சிறப்பு என்னவென்றால் இதன் அபாரமான இசையாகும்.

நாய்ஸ் ஸீரோ ஒ+ன் இயர் கப்புகள் மிகவும் அருமையாக உள்ளன. இந்த ஹெட்போன் மிகவும் நெகிழ்வு தன்மையுடன் பல நிறங்களில் வருகிறது. இந்த ஹெட்போன் 50மிமீ டைட்டானியம் கலந்த எச்டி ட்ரைவர் கொண்டு வருகிறது.

வாய்ஸ் தெளிவுக்காக இது ஐயன் போரன் மேக்னட்டும் கொண்டு வருகிறது. இந்த ஹெட்போனை ஐபாட் மற்றும் ஐபோன் ஆகியவற்றில் மிக எளிதாக இணைக்க முடியும். இது இரைச்சல் தடுப்பு தொழில் நுட்பத்தையும் கொண்டுள்ளது.

நாய்ஸ் ஸீரோ ஒ+ ஹெட்போனோடு நாய்ஸ் ஸீரோ ஐ+ இயர்பட்சையும் அறிமுகப்படுத்த இஒபிஎஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதுவும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருள்களால் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது மிகவும் தரம் வாய்ந்த ஒன்றாகும்.

இந்த இயர்பட்ஸ் காதுகளில் மிக சரியாக பொருந்தும். இந்த நாய்ஸ் ஸீரோ ஒ+ மற்றும் நாய்ஸ் ஸீரோ ஐ+ ஆகிய இரண்டும் விரைவில் சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X