2017 ஜூலை 14 : இரட்டை கேமரா அமைப்புடன் வெளிவரும் ஜியோனி ஏ1 பிளஸ்.!
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளதுஇமற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.!
ஜியோனி நிறுவனம் தனது புதிய மொபைல்மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் ஜியோனி நிறுவனம் தற்போது கேமரா அமைப்பில் அதிக கவனம் செலுத்திவருகிறது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் அதன் ஸ்மார்ட்போன்களை
அறிமுகப்படுத்துகிறது.
தற்போது ஜியோனி ஏ1 பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது ஜியோனி நிறுவனம், மேலும் ஜூலை 14-ல் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் 1080 வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவைஇந்த ஸ்மார்ட்போன்.கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு இடம்பெற்றுள்ளது. இதன் வடிவமைப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேமரா:
ஜியோனி ஏ1 பிளஸ் பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 20 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு உள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

4ஜிபி ரேம்;
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
மீடியா டெக் ஹெலியோ பி25 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0(நௌகட்) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. மேலும் 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.0, போன்ற பல்வேறு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:
ஜியோனி ஏ1 பிளஸ் பொருத்தவரை 4550எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி.


Click it and Unblock the Notifications