குறைந்த விலையில் ஜீனியஸின் 'டவர்' ஸ்பீக்கர்கள்

Posted By: Staff

குறைந்த விலையில் ஜீனியஸின் 'டவர்' ஸ்பீக்கர்கள்
ஜீனியஸ் நிறுவனம் என்றாலே அவற்றின் தரமான ஆடியோ கெட்ஜட்டுகள் இசைப் பிரியர்களின் ஞாபகத்திற்கு வரும். இப்போது அந்நிறுவனம் புதிய எஸ்பி-எச்எப்2020 டிஜிட்டல் கோபுர வடிவிலான ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்துகிறது.

இது சிறந்த செயல் திறனுடன் தரமான் ஆடியோவை வழங்கும். குறிப்பாக மரத்தால் செய்யப்பட்ட ஸ்பீக்கர்களுக்கு மோகம் அதிகம். அதனாலேயே ஜீனியஸ் நிறுவனம் தமது ஸ்பீக்கர்களை மரத்தால் செய்து அறிமுகப்படுத்துகிறது.

எஸ்பி-எச்எப்2020 டிஜிட்டல் மர கோபுர ஸ்பீக்கர்களை டிவிடியில் ப்ளக் செய்ய முடியும். இதிலிருந்த வரும் அடி ஓசை மிக ரம்மியமாக இருக்கும். இது மிக உயர்தர ஆம்ப்ளிடியூட் சவுண்ட் பைல்களைக்கூட சப்போர்ட் செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது.

குறிப்பாக ராக் இசையை இதில் கேட்கும் போது அதன் சாரத்தை இழக்காமல் இந்த ஸ்பீக்கர்களில் கேட்க முடியும். குறிப்பா க்ளாசிக் ராக் மற்றும் மெலடி இசையை இதில் மிகத் துல்லியமாக கேட்கலாம்.

மேலும் எஸ்பி-எச்எப்2020 டிஜிட்டல் மர கோபுர ஸ்பீக்கர்கள் சின்க்ரோனைஸ் செய்யக்கூடிய யுஎஸ்பி போர்ட்டுகளையும் வழங்குகின்றன. அதேபோல் இதற்கு ரிமோட் கண்ட்ரோலும் உண்டு. அதன் மூலம் ஒலி அளவை நமது விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளலாம்.

எஸ்பி-எச்எப்2020 டிஜிட்டல் மர கோபுர ஸ்பீக்கர்கள் ஒரு ஹோம் தியேட்டரைப் போலவும் செயல்படுகின்றன. இவை 3.2 இன்ச் எல்சிடி எச்டிடிவியோடு இணைக்கப் படும்போது இதன் ஒலி அமைப்பு மிக அபாரமாக உள்ளது. மேலும் இதன் விலையைப் பார்த்தால் மிக மலிவாகும். அதாவது இந்தயாவில் ரூ.4,779க்கு கிடைக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot