Home
Music

ஐபேட், ஐபோன் ஆடியோவை வலுப்படுத்தும் புதிய ஸ்பீக்கர்கள்!

By Super
ஐபேட், ஐபோன் ஆடியோவை வலுப்படுத்தும் புதிய ஸ்பீக்கர்கள்!

ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த பெருமை எல்லாம் ஆப்பிளின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு போய்ச் சேரும்.

ஐபோன் மற்றும் ஐபேடு மட்டுமல்ல, எந்த ஒரு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டாக இருந்தாலும் அதில் குறைகள் இருந்தே தீரும். குறிப்பாக அவற்றில் இருக்கும் ஆடியோ ஸ்பீக்கர்கள் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. அதனால் ஐபோன்,ஸ்மார்ட்போன் அல்லது ஐபேட் சாதனங்களில் துல்லியமான இசையை கேட்பதற்கு தனியாக ஸ்பீக்கர் வாங்க வேண்டியதிருக்கிறது.

அதற்காகவே இப்போது ஜீனியஸ் நிறுவனம் ஐபோன் மற்றும் ஐபேடுக்கு புதிய ஸ்பீக்கரைத் தயாரித்து வழங்குகிறது. இந்த ஸ்பீக்கர்கள் பல மாடல்களில் வருகின்றன.

ஐபேடுக்கான எஸ்பி-ஐ600 என்ற டாக்கிங் ஸ்பீக்கர் சுழலும் தன்மை கொண்டது. இதை படுக்கை நிலையிலோ அல்லது நிற்கும் நிலையிலோ வைக்க முடியும். இந்த ஸ்பீக்கர் 4 வாட்ஸ்களைக் கொண்டது. இது ஒரு ஹோம் தியேட்டரைப் போல இருக்கும். மேலும் இது ரிமோட் கண்ட்ரோல் கொண்டிருக்கிறது. இதிலிருந்த வரும் இசை மிகத் தெளிவாக இருக்கும்.

ஐபோனுக்கான ஜீனியஸ் எஸ்பி-ஐ500 ஸ்பீக்கர் தரமான ஆடியோ ப்ளேபேக்கை வழங்குகிறது. இதன் மொத்த மின் திறன் 2 வாட்ஸ் ஆகும். இதில் 4 பட்டன்கள் உள்ளன. இந்த ஸ்பீக்கர் சார்ஜிங் ஸ்டேசனாகவும் அலாரமாகவும் செயல்படுகிறது. அப்ஸ்டோரிலிருந்து இலவசமாக ஐபோனுக்கான இலவச அலாரம் அப்ளிகேசனை இந்த ஸ்பீக்கர் மூலம் பெற முடியும்.

ஜீனியசின் எஸ்பி-ஐ600 மற்றும் எஸ்பி-ஐ500 ஸ்பீக்கர்கள் கருப்பு நிறத்தில் மிக அழகாக உள்ளன. இவற்றின் விலையைப் பார்த்தால் எஸ்பி-ஐ500 ரூ.6,500க்கும் எஸ்பி-ஐ600 ரூ.3,500க்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X