நவீன தொழில்நுட்பத்துடன் புதிய ஹைபைமேன் ஹெட்போன்

ஒரு காலத்தில் ஹெட்போன் புதிய படைப்பாக கருதப்பட்டது. அது ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்டது. ஏனெனில் அது இசை கேட்பதில் சுதந்திரத்தைக் கொடுத்தது. ஆனால் இப்போது அந்த ஹெட்போன்கள் வாடிக்கையாளர்களால் பெருமளவு விரும்பப்படுகிறது.
ஹெட்போன் இசையை வழங்குவது மட்டுமல்லாது அது பல புதிய தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஹெட்போன் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் மிகத் தரமாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இப்போது ஏராளமானோர் ஹெட்போனில் நீண்ட நேரம் இசை கேட்கின்றனர். இதனால், காதுகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காக சிறந்த இயர்பட்ஸ்களை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.
வாடிக்கையாளர்களின் இந்த தேவைகளை உணர்ந்து டேர், கோஸ், சென்ஹெய்சர் மற்றும் ஹெட்-டைரக்ட் போன்ற நிறுவனங்கள் தரமான ஹெட்போன்களை வழங்குகின்றன.
இந்த வரிசையில் தற்போது ஹெட்-டைரக்ட் நிறுவனம் ஹைபைமேன் எச்இ-300 என்ற புதிய ஹெட்போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது காதில் வெகு அழகாக பொருந்திக்கொள்ளும். இந்த ஹெட்போன் 93சிபி சென்சிட்டிவிட்டையைக் கொண்டுள்ளது. இதை எந்த ஒரு போர்ட்டபுள் ஆடியோ டிவைஸ் மற்றும் ஆம்ப்ளிபயர்களில் இணைத்துக்கொள்ளலாம்.
ஹைபைமேன் எச்இ-300 ஹெட்போன் ஒரு யூசர் ப்ரண்ட்லி ஹெட்போன் என்று கூறும் அளவிற்கு வசதிகளை கொண்டிருக்கிறது. இதன் எடை 270 கிராம் ஆகும். இதன் வயர் மிக அருமையாக வளைந்து கொடுப்பதால் இந்த ஹெட்போனை மிக எளிமையாக சிரமமின்றி அணிந்து கொள்ளலாம்.
இதன் இயர் பேட்ஸ் தோலினால் செய்யப்பட்டுள்ளது. பல மணி நேரம் இதை காதில் அணிந்திருந்தாலும் காதுகளுக்கு எரிச்சல் ஏற்படாது. இந்த எச்இ-300 ஹெட்போனின் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 15-22000 ஹெர்ட்ஸ் ஆகும். இதன் மின்திறன் 30எம் வாட்ஸ் ஆகும்.
இதன் இம்பீடன்ஸ் 50 ஓம்களாகும். இதன் ட்ரைவர்கள் 50மிமீ டயாமீட்டரைக் கொண்டுள்ளன. இதன் விலை ரூ.15,000க்குள் இருக்கும்.


Click it and Unblock the Notifications