அதிக சக்தி கொண்ட ஃபியூஜிபிலிமின் புதிய கேமரா!

By Karthikeyan
|
அதிக சக்தி கொண்ட ஃபியூஜிபிலிமின் புதிய கேமரா!

இந்த எக்ஸ்-எஸ்1 கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 12 மெகா பிக்சல் 2/3 இன்ச் இஎக்ஸ்ஆர்-சிஎம்ஒஎஸ் சென்சாரைக் கொண்டிருக்கிறது. அதுபோல் புஜினன் 26எக்ஸ் ஆப்டிக்கல் பிரிசிசன் சூம் லென்சையும் இந்த டிஜிட்டல் கேமரா கொண்டுள்ளது.

அதுபோல் இதில் சூப்பர் மேக்ரோ மோடும் உண்டு. இந்த கேமரா ஒரு வினாடிக்கு 30 பிரேம்கள் அளவில் முழுமையான எச்டி 1050பி வீடியோ ரிக்கார்டிங்கை செய்யும் வசதியைக் கொண்டிருக்கிறது. அதுபோல் மிக விலைவாக தொடர்ந்து சூட்டிங் செய்யும் திறனையும் இந்த கேமரா கொண்டிருக்கிறது.

இந்த எஸ்1 கேமராவின் டிசைனைப் பார்த்தால் இது கன்வென்சனல் கேமரா டிசைனை ஒத்திருக்கிறது. இந்த கேமரா பார்ப்பதற்கு டிஎஸ்எல்ஆர் கேமராவை முழுவதுமாக ஒத்திருந்தாலும் இது அடக்கமாக அதே நேரத்தில் ஸ்லீக்காகவும் இருக்கிறது. இந்த கேமராவில் மிகவும் டிரிக்கியான் ஷார்ட்டுகளையும் எடுக்க முடியும்.

இதன் சிஎம்ஒஎஸ் சென்சார் பிஜிபிலிம் எக்ஸ்10 கேமராவில் உள்ளதாகும். மேலும் இது பிஜினன் 26எக்ஸ் ஆப்டிக்கல் பிரிசிசன் லென்ஸ் கொண்டிருப்பதால் இதன் சூமிங் திறன் மிக சூப்பராக இருக்கும். இந்த லென்ஸ் 17 கண்ணாடிகளால் செய்யப்பட்டுள்ளது.

இவை 4 எலமென்டுகளையும் 2 இடி லென்சுக்களையும் கொண்டுள்ளன. இந்த லென்சின் மூலம் படங்களை மீண்டும் மிகத் தெளிவாகக் கொண்டு வர முடியும். மேலும் இதில் உள்ள சூப்பர் மேக்ரோ மோட் மூலம் 1 செமீ தூரத்தில் உள்ள பொருள்களைக் கூட மிக அழகாக மற்றும் துல்லியமாக படம் பிடிக்க முடியும்.

மேலும் இந்த எஸ்1 கேமரா உயர்தரம் கொண்ட வீடியோக்களையும் மிக எளிதாக ரிக்கார்ட் செய்யும். அதாவது முழுமையான 1080பி வீடியோக்கள் கூட ஸ்டீரியோ ஒலி அமைப்புடன் வினாடிக்கு 30 பிரேம்கள் வீதம் ரிக்கார்ட் செய்ய முடியும். பதிவு செய்யப்பட்ட வீடியோ பைல்கள் எச்.264 பார்மட்டில் சேமிக்கப்படுகின்றன.

அதுபோல் இதன் தொடர் சூட்டிங் திறன் 12 மெகா பிக்சல் துல்லியத்துடன் வினாடிக்கு 7 பிரேம்களும், 6 மெகா பிக்சல் துல்லியத்துடன் வினாடிக்கு 10 பிரேம்களும் ஆகும். இந்த எக்ஸ்-எஸ்1 கேமராவில் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இது டிஎஸ்எல்ஆர் கேமராவின் விலையை ஒத்திருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X