பணத்தை திரும்பபெறும் சலுகையுடன் ஐபோன் ஸ்பீக்கர் அறிமுகம்

Posted By: Staff

பணத்தை திரும்பபெறும் சலுகையுடன் ஐபோன் ஸ்பீக்கர் அறிமுகம்
ப்ளூயன்ஸ் நிறுவனம் ஸ்பீக்கர்கள் தயாரிப்பில் தனக்கென்று ஒரு சிறந்த பெயரையே வைத்திருக்கிறது. மேலும் இந்த நிறுவனம் காலத்தில் சூழலுக்கு ஏற்ப தமது படைப்புகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் இன்னும் சந்தையில் நிலைத்து இருக்கிறது.

ப்ளூயன்ஸ் முழுமையான் ஸ்பீக்கர் சிஸ்டத்தையும் அதுபோல் தளத்தில் நிறுத்தி வைக்கக்கூடிய ஸ்பீக்கர்களையும் வழங்கியிருக்கிறது. இவை கூட புத்தக அலமாரி ஸ்பீக்கர்கள் மற்றும் சரவுண்டு சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் ஆகும். இதன் துணை ஊபர்கள் அருமையான இசையை வாரி வழங்கும்.

ப்ளூயன்ஸ் நிறுவனத்தின் புதிய படைப்பு என்னவென்றால் அது பிஎஸ்டிகே500 ஆகும். இது ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான ஸ்பீக்கர் ஆகும். இதிலிருந்த வரும் இசை ஹோம் தியேட்டரிலிருந்து வரும் இசையைப்போல் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்.

பிஎஸ்டிகே500ன் சிறப்புகளைப் பார்த்தால் அது ஆடியோ-க்ரேட் மர கேபினட் கொண்டுள்ளது. மேலும் இது 2 பெரிய ஊபர்கள் மற்றும் அல்ட்ரா ஹை என்ட் ட்வீட்டர்களையும் கொண்டிருக்கிறது. இதன் ஒலி அளவு 40டிபி ஆகும். இதன் எடை என்று பார்த்தால் அது 6.1 கிலோவாகும். இது இண்டக்ரேட்டட் ஆம்ப்ளிபையருடன் 2 வே 4 ட்ரைவர் மீயூசிக் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த ஆம்பிளிபையரின் திறன் 20 வாட்ஸ் ஆகும்.

பிஎஸ்டிகே500 வாழ்நாள் உத்திரவாதத்துடன் வருகிறது. இதன் வட்ட வடிவ கடிகார தொழில்நுட்ப சப்போர்ட் மற்றும் டோல்ப்ரீ வாடிக்கையாளர் சேவை கண்டிப்பாக வாடிக்கையாளர்களின் கண்ணையும் கருத்தையும் கவரக்கூடிய ஒன்றாக இருக்கும். மேலும் இது 30 நாள் திருப்தி உத்திரவாதமும் வழங்குகிறது.

30 நாள்களுக்குள் இந்த பிஎஸ்டிகே500ன் மீது உங்களுக்கு திருப்தி வரவில்லையானால் இதை 30 நாட்களுக்குள் திருப்பித் தந்துவிட்டு பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். இது ரூ.9,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot