வளைந்து கொடுக்கும் தன்மையுடன் புதிய பிலிப்ஸ் ஹெட்போன்

By Super
|
வளைந்து கொடுக்கும் தன்மையுடன் புதிய பிலிப்ஸ் ஹெட்போன்

வளைந்து கொடுக்கும் தன்மையுடன் குளிர்ப் பிரதேசங்களுக்கு ஏற்ற அம்சங்களுடன் புதிய ஹெட்செட்டை பிலிப்ஸ் ஒனில் கூட்டணி வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பனிச் சறுக்கு விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற வகையில் இந்த ஹெட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

0 டிகிரிக்கும் குறைவான தட்ப வெப்பநிலையில் விளையாடப்படும் பனிச்சறுக்கு விளையாட்டுகளின் போது இதைப் பயன்படுத்த முடியும். அதற்கேற்ப இந்த ஹெட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெட்போனை நமது காதுகளின் மேல் பொருத்திக் கொள்ளலாம். மேலும் இதன் அடுத்த சிறப்பு இந்த ஹெட்போனை நேராக நீட்டிக் கொள்ளலாம். அதே நேரத்தில் வளைத்தும் கொள்ளலாம். இதை பென்டு ஹெட்போன் என்று அழைக்கலாம். இது 2 நிறங்களில் வருகிறது.

இதன் இயர் பட்ஸ்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் காதுகளில் நன்றாக பொருந்திக்கொள்ளும். அதே நேரத்தில் வெளிப்புறத்தில் இருந்த வரும் சத்தம் மற்றும் இரைச்சல்களை மிக எளிதாகத் தடுத்துவிடும்.

இதில் பல மணி நேரம் மிக இனிமையாக இசையைக் கேட்கலாம். இதில் எலாஸ்டிக் உள்ளதால் இது கீழே விழுந்துவிடும் என்ற பயமும் இல்லை.

இந்த பென்ட் ஹெட்போன் வயருடன் வருகிறது. இந்த வயரில் ஒரு புறத்தில் உள்ள 3.5மிமீ ஆடியோ ஜாக் 2வது ஜாக் மூலம் ஹெட்போனுக்கு தொடர்பை ஏற்படுத்துகிறது.

இந்த வயரை ஹெட்போனிலிருந்து பிரித்து எடுக்க முடியும் என்பதால் இதை எடுத்துச் செல்வது மிக எளிதாக இருக்கும். இதன் மொத்த எடை 110 கிராம் மட்டுமே

இந்த பென்ட் ஹெட்போனின் ஒலி அமைப்பு மிக அலாதியானது. குறிப்பாக இதன் பேஸ் மற்றும் ட்ரிபில் உள்ளிட்ட எந்த மோடில் வைத்தாலும் இது அருமையான இசையை வழங்கும். மொத்தத்தில் இந்த ஹெட்செட்டில் இசை கேட்டால் கண்டிப்பாக இது இன்னொரு உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

பிலிப்ல் பென்ட் ஹெட்செட்டின் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 15 முதல் 24000 ஹெர்ட்ஸ் ஆகும். இதன் 40மிமீ ட்ரைவர் நியோடியம் மேக்னட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் அவுட்புட் மின்திறன் 100எம்வாட்ஸ் ஆகும். இதன் கேபிள் 1.2 மீட்டரைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.4000 முதல் 5000க்குள் இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X