தொல்லையில்லாமல் எல்லையில்லா இசை வழங்கும் புதிய ஹெட்போன்!

By Super
|
தொல்லையில்லாமல் எல்லையில்லா இசை வழங்கும் புதிய ஹெட்போன்!

இரைச்சல் தொல்லை இல்லாமல் எல்லையில்லா இசையை கேட்டு மகிழ்வதற்கு புதிய ஹெட்போனை கிளிப்ச் அறிமுகப்படுத்துகிறது.

மிகத் தரமான ஹெட்போன்களை வழங்குவதில் க்ளிப்ச் நிறுவனம் எப்போதுமே முன் வரிசையில் இருக்கிறது. ஆனால் இந்நிறுவனம் இதுவரை இரைச்சல் தடுப்பு கொண்ட ஹெட்போன்களை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்போது முதல் முறையாக இரைச்சல்க்ளிப்ச் மோட் எம்40 என்ற இரைச்சல் தடுப்பு வசதி கொண்ட புதிய ஹெட்போனை அறிமுகப்படுத்துகிறது.

இந்த க்ளிப்ச் மோட் எம்40 ஹெட்போனின் சிறப்புகளைப் பார்த்தால் முதலில் அதன் வடிவமைப்பே மிக அபாரமாக உள்ளது. அடுத்ததாக 40மிமீ ஊபர் கொண்டுள்ளது. மேலும் இதில் 15மிமீ ட்வீட்டரும் உள்ளது. இந்த ஹெட்போனின் ப்ரீக்வன்சி 20ஹெர்ட்ஸ் முதல் 20 கிலோ ஹெர்ட்ஸ் ஆகும்.

இதன் இம்பீடன்ஸ் 1கிலோ ஹெர்ட்ஸ் : 320 ஓம்களாகும். 356 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ள இந்த ஹெட்போன் 97.5 டிபி சென்சிட்டிவிட்டி கொண்டுள்ளது.

க்ளிப்ச் ஹெட்போனின் இயர் கப்புகள் பெரிதாக உள்ளதால் நமது காதுகளை அம்சமாக மூடிக்கொள்ளும். மேலும் அவை மிகவும் மென்மையாக இருப்பதால் நீண்ட நேரம் இந்த ஹெட்போனை காதுகளில் அணிந்து இசையைக் கேட்டாலும் எரிச்சல் ஊட்டுவதில்லை.

இந்த ஹெட்போனில் ஒரு இன்லைன் மைக்ரோபோன் உள்ளது. இந்த ஹெட்போனை ஐபோன்களில் மிக எளிதாக இணைக்க முடியும். இந்த ஹெட்போனின் மேல் எல்லா பட்டன்களும் உள்ளன. ஆனால் இதை அணிந்திருக்கும் போது இந்த பட்டன்கள் கண்களுக்குத் தெரியாது. மேலும் இந்த பட்டன்களை இயக்குவதற்கு மிக எளிதாக இருக்கும்.

ஹெட்போனில் இரைச்சல் தடுப்பு வசதி வேண்டும் என்றால் அதற்கு பேட்டரி தேவைப்படும். இந்த க்ளிப்ச் ஹெட்போன் பேட்டரி இரைச்சல் தடுப்பு வசதியோடு 45 மணி நேர பேக்கப்பையும் வழங்குகிறது. இந்த ஹெட்போன் பேட்டரியின் துணை இல்லாமல் இயங்கும் போது சற்று இரைச்சல் இருக்கும். ஆனால் பேட்டரியி்ல் இயங்கும் போது இரைச்சல் இல்லாமல் மிக அருமையாக இருக்கும்.

இந்த க்ளிப்ச் ஹெட்போனில் உள்ள 3 பட்டன் மைக் ஆப்பிளின் டிவைஸ்களான ஐபாட் நானோ, ஐபோன் 4எஸ் மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றோடும் மிகவும் எளிதாக இணைக்கும் வசதிகொண்டிருக்கும்.

இந்த க்ளிப்ச் மோட் எம்40 ஹெட்போனின் விலை ரூ.15,000ஐ விட அதிகமாக இருக்கும். ஆனால் இதன் சூப்பரான செயல் திறன் இந்த அதிக விலையை மறைத்துவிடும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X