புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் பென்டாக்ஸ் கே5 கேமரா!

பென்டாக்ஸ் கே-5 கேமரா புகைப்படம் எடுக்கும் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் உள்ளவர்கள் மத்தியின் மிக பிரபலமான ஒன்றாகும். இந்த கேமராவில் பல அப்டேட்களை செய்யப்போவதாக பர்ம்வேர் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
புதிய அப்டேட்டுகள் மூலம் இந்த கேமராவின் சாப்ட்வேர்ஸ மேம்படுத்தப்படும். இந்த கேமராவில் உள்ள மிக முக்கிய மாற்றம் இதன் வி1.12 இமேஜ் கேப்சர் கரக்சன் ஆகும். இந்த கேமரா மூலம் ஆஸ்ட்ரோட்ரேசர் பங்க்சனோடு படம் பிடிக்கும் போது அந்த படத்தில் லைட் க்ரீன் நாய்ஸ் இருப்பதாக இந்த கேமராவை பயன்படுத்துவோர் புகார் தெரிவித்திருந்தனர்.
இப்போது அந்த குறைபாடு நீக்கப்பட்டுவிட்டது. ஜிபிஎஸ் டேட்டாவைப் பெருவதற்காகவும் மற்றும் ஆர்எடபுள்யு படங்களை எடுப்பதற்காகவும் வி1.11 வெர்சன் சரி செய்யப்பட்டது. அதுபோல் ஜிபிஎஸ் உடன் தொடர்புள்ள வி1.10 வெர்சனும் விரைவில் அப்டேட் செய்யப்படும்.
வி1.03 வெர்சனில் அதிகமான மாற்றம் இருக்கும். அதாவது குறைந்த வெளிச்சத்தில் படம் எடுக்கும் போது படம் துல்லியமாக இருப்பதற்காக ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதுபோல் இதன் பொதுவான செயல்திறனும் அதிகரித்திருக்கிறது. அதுபோல் வி1.02 வெர்சனில் எஸ்டிஎக்ஸ்சி மெமரி கார்டு அப்டேட் செய்யப்படுகிறது.
இந்த அப்டேட்டுகளை எல்லாம் பர்ம்வேர் தனது அதிகாரப்பூர்வ இனையதளத்தில் கே-5 கேமராவை பயன்படுத்துவோருக்காக வெளியிட்டிருக்கிறது. அந்த இணையதளத்திலிருந்து கே-5 கேமராவைப் பயன்படுத்துவோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications