Home
Music

நீர் தடுப்பு வசதியுடன் புதிய எம்பி3 ப்ளேயர்!

By Karthikeyan
நீர் தடுப்பு வசதியுடன் புதிய எம்பி3 ப்ளேயர்!

பினிஸ் ஒரு புதிய எம்பி 3 ப்ளேயரைக் களமிறக்குகிறது. இந்த எம்பி 3 ப்ளேயருக்கு ஸ்விம்3.2ஜி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த இசைப் பேழை நீர் தடுப்பு வசதி கொண்டது. எனவே தண்ணீரில் நீந்திக் கொண்டிருக்கும் போது இந்த இந்த இசைப் பேழையில் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.

இந்த இசைப் பேழையில் இயர் போன் மற்றும் இயர் பட்சுக்களுக்குப் பதிலாக ஒரு புதிய சாதனத்தை வழங்குகிறது. இதன் மூலம் தண்ணீருக்குள் நீந்தும் போது நனைந்தாலும் அது பாதிப்பு அடைவதில்லை.

மேலும் அது காதுகளுக்கு தொந்தரவாக இருக்காது. மேலும் இந்த இசைப் பேழை அட்டகாசமான இசை மழையைப் பொழிகிறது. குறிப்பாக வயது முதிர்ந்தோர் இந்த இசைப் பேழையை மிக எளிதாக அணிந்து கொள்ளலாம். மேலும் இதை மிக எளிதாகவும் எடுத்துச் செல்லலாம்.

இந்த இசைப் பேழை 2 ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த இசைப் பேழையை தாடை எழும்புகளோடு பொருத்திக் கொள்ளலாம். இதில் யுஎஸ்பி வசதியும் உள்ளதால் இதில் தகவல் பரிமாற்றம் செய்வதும் மிக எளிதாக இருக்கும்.

தண்ணீருக்கு அடியில் இந்த இசைப் பேழை மிக சிறப்பான இசை அனுபவத்தை வழங்கும். இதில் 500 பாடல்களுக்கு மேல் சேர்த்து வைத்து 30 மணி நேரத்திற்கும் மேலாக பாடல் கேட்கலாம். அதோடு இதன் லித்தியம் ஐயன் பேட்டரி 8 மணி நேர இயங்கு நேரத்தையும் வழங்குகிறது.

மேலும் இந்த இசைப் பேழை மஞ்சள் மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் வருகிறது. இதன் விலை ரூ.8,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X