Home
Music

லாஜிக் 3 வழங்கும் ஃபெராரி ஹெட்போன்கள்!

By Karthikeyan
லாஜிக் 3 வழங்கும் ஃபெராரி ஹெட்போன்கள்!

லாஜிக் 3 நிறுவனம் சமீபத்தில் ஃபெராரி வரிசையில் பல புதிய ஹெட்போன்களை சமீபத்தில் இங்கிலாந்தில் களமிறக்கி இருக்கிறது. மிகப் பெரிய கார் நிறுவனமான பெராரியுடன் வியாபார ஒப்பந்தம் ஏற்படுத்தி பெராரி காவலினோ மற்றும் சுடேரியா பெராரி போன்ற புதிய ஹெட்போன்களைக் களமிற்க்குகிறது லாஜிக் 3.

குறிப்பாக இந்த ஹெட்போன்கள் மிகவும் பிரபலமான கார் நிறுவனமான பெராரியின் பெயரில் வருவதால் இந்த சூப்பரான டிசைனில் தயாரித்திருப்பதாக லாஜிக் நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த புதிய ஹெட்போன்கள் விளையாட்டு ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

சுடேரியா பெராரி வரிசையில் வரும் ஆர்200 என்ற ஹெட்போன் காதுகள் முழுமையாக மூடிக் கொள்ளும். இந்த ஹெட்போன் வெள்ளி மற்றும் வெள்ள நிறங்களில் வருகின்றன. இந்த ஹெட்போன் ரூ.18,000க்கு விற்கப்படுகிறது.

அதே நேரத்தில் பி200 என்ற ஹெட்போனும் இதே விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால் இது கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் வருகிறது. ஆர்100 மற்றும் ஆர்100ஐ ஹெட்போன்கள் இரைச்சல் இல்லாமலும் அதே நேரத்தில் வெளிப்புறத்தில் இருந்து வரும் இரைச்சலைத் தடுக்கும் வசதியுடனும் வருகின்றன. இவை கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகின்றன. இவற்றை ரூ.10,000க்கு வாங்கலாம். அதே நேரத்தில் எஸ்100 மற்றும் எஸ்100ஐ என்ற ஹெட்போன்களை ரூ.8,500க்கு வாங்கலாம்.

பெராரி காவலினோ வரிசையில் வரும் டி250 ஹெட்போன் சூப்பரான ஆடியோ தரத்துடன் வருகிறது. இந் தஹெட்போன் கருப்பு நிறத்தில் களையாக வருகிறது. இந்த ஹெட்போனை ரூ.12,000க்கு வாங்கலாம்.

அடுத்ததாக இந்த வரிசையில் வரும் டி150 மற்றும் டி150ஐ போன்ற ஹெட்போன்கள் மிகவும் நீடித்து உழைக்கக் கூடியவை. இவை ரூ.13,000க்கு விற்கப்படுகின்றன. அதுபோல் ஜி150 மற்றும் ஜி150ஐ ஹெட்போன்களும் ரூ.11,000க்கு விற்கப்படுகின்றன.

இங்கிலாந்தில் விற்கப்படும் இந்த சூப்பர் ஹெட்போன்கள் விரைவில் இந்தியாவிற்கு வரும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X