மொபைல்களுக்கான அட்டகாசமான புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்

By Super
|
மொபைல்களுக்கான அட்டகாசமான புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்

சமீபத்தில் பென்டா ஆடியோ நிறுவனம் இரண்டு புதிய 2.1 வயர்லஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்களைக் களமிறக்கி இருக்கிறது.

இந்த புதிய ஸ்பீக்கர்களுக்கு டபுள்யு330பிடி மற்றும் டிபுள்யு130பிடி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. 2004ல் தொடங்கப்பட்ட பென்டா நிறுவனம் இந்திய சந்தையில் பல சூப்பரான ஆடியோ ஸ்பீக்கர்களை ஏற்கனவே களமிறக்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டு புதிய ஸ்பீக்கர்களும் மிகவும் தரம் வாய்ந்தவையாக இருக்கும்

என்று நம்பலாம்.

டபுள்யு330 ஸ்பீக்கர் 56வாட்ஸ் அவுட்புட்டையும் அதே நேரத்தில் 28வாட்ஸ் துணை ஊபர் அவுட்புட்டையும் வழங்குகிறது. டபுள்யு130 ஸ்பீக்கர் 42வாட்ஸ் அவுட்புட்டை வழங்குகிறது. இந்த இரண்டு ஸ்பீக்கர்களும் சூப்பரான பேஸ் இசையையும் அதே நேரத்தில் மிகத் துல்லியமான ஒலியையும் வழங்கும் என்று பென்டா கூறுகிறது.

இந்த இரண்டு ப்ளூடூத் ஸ்பீக்கர்களும் கேம்ப்ரிட்ஜ் சிலிகான் ரேடியோ (சிஎஸ்ஆர்) சிப்செட்டைக் கொண்டிருக்கின்றன. அதோடு எஸ்ஐஜி தர சான்றிதழையும் தாங்கி வருகின்றன.

இந்த இரண்டு ஸ்பீக்கர்களையும் ஐபோன்கள், ஐபோடுகள், ஐபேடுகள், சாம்சங் கேலக்ஸி மற்றும் எச்டிசி போன்களில் மிக எளிதாக இணைத்துக் கொள்ளலாம். டபுள்யு330 ஸ்பீக்கர் ரூ.5,990க்கும் டபுள்யு130 ஸ்பீக்கர் ரூ.3,990க்கும் விற்கப்படுகின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X