Home
Music

அட்டகாசமான தொழில்நுட்பங்களுடன் புதிய பிலிப்ஸ் ப்ளூ ரே ப்ளேயர்!

By Super
அட்டகாசமான தொழில்நுட்பங்களுடன் புதிய பிலிப்ஸ் ப்ளூ ரே ப்ளேயர்!

பிலிப்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் நன் மதிப்பை பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. மேலும் பிலிப்சின் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை இந்திய மக்கள் விரும்பி வாங்குவர். ஏனெனில் பிலிப்சின் படைப்புகள் மிகத் தரமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அந்த வகையில் தற்போது பிலிப்ஸ் நிறுவனம் பிலிப்ஸ் பிடிபி5200 3டி ப்ளூ-ரே ப்ளையரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ப்ளேயரின் தொழில் நுட்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த ப்ளேயரின் பரப்பு 435 x 42 x 208.5 மிமீ ஆகும். இதன் எடை 1.65 கிலோ ஆகும். இந்த ப்ளேயர் காம்போசிட் வீடியோ அவுட்புட்டைக் கொண்டிருக்கிறது. மேலும் டிஜிட்டல் ஆடியோ அவுட்புட்டையும் (கோஆக்சியல் மற்றும் ஆப்டிக்கல்) கொண்டிருக்கிறது.

இந்த ப்லிப்ஸ் ப்ளேயரின் இணைப்பு வசதிகளைப் பார்த்தால் அது எச்டிஎம்ஐ அவுட்புட், யுஎஸ்பி வி2.0 போர்ட், எர்த்நெட் போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் எஸ்டி/எஸ்டிஎச்சி கார்டு ஸ்லாட்டும் கொண்டுள்ளது. அதுபோல் 148 மெகா ஹெர்ட்ஸ் ஆடியோ டி/எ கன்வெர்ட்டரைக் கொண்டுள்ளது.

தெளிவான படத்தை வழங்குவதற்காக டோல்பி ட்ரூ எச்டி படத் தரத்தை இந்த ப்ளேயர் கொண்டுள்ளது. அதுபோல் டிடிஎஸ் டிஜிட்டல் ஆடியோ அவுட்புட்டும் இந்த ப்ளேயரில் அடக்கம். மேலும் டிவிடி/டிவிடி-ஆர்/ஆர்டபுள்யு வீடியோ பார்மட் ப்ளேபேக் மற்றும் சிடி-ஆர்/ஆர்டபுள்யு வீடியோ பார்மெட் ப்ளேபேக்கையும் இந்த ப்ளேயர் வழங்குகிறது.

அடுத்ததாக இந்த ப்ளேயர் ஜேபிஇஜி இமேஜ் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் இது சிங்கிள்/டூவல் லேயர் கொண்ட பிடி-ரோம் ப்ளேபேக் மற்றும் பிடஆர்/ஆர்இ ப்ளேபேக்கையும் இந்த ப்ளேயர் வழங்குகிறது. இந்த பிலிப்ஸ் ப்ளேயரின் மின் திறன் 50-60 ஹெர்ட்சில் 220வி-240வி ஆகும்.

இந்த பிலிப்ஸ் ப்ளூ-ரே ப்ளேயர் கருப்பு மற்றும் க்ரே நிறங்களில் மிக அழகாக இருக்கிறது. இதன் முன்புறத்தில் யுஎஸ்பி போர்ட்டுடன் வருகிறது. இதன் மத்தியில் பிலிப்சின் முத்திரை இருக்கும். இதன் டிஸ்க்குகள் மென்மையாக மூடித் திறக்கும்.

இந்த ப்ளேயரின் பின்புறத்தில் எஸ்டி/எஸ்டிஎச்சி கார்டு ஸ்லாட், எச்டிஎம்ஐ அவுட்புட், கம்போசிட் வீடியோ அவுட்புட், அனலாக் போர்ட்டுகள் மற்றும் எர்த்நெட் போர்ட் ஆகியவை உள்ளன.

இந்த பிலிப்ஸ் ப்ளேயரின் ரிமோட் ப்ளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு ரப்பர் பட்டன்களைக் கொண்டு மிகவும் மென்மையாக உள்ளன. இந்த ப்ளேயர் முழு 3டி எச்டி 1080பி வீடியோ பைல்கள் மற்றும் இன்டர்நெட் வீடியோ ப்ளேபேக் போன்றவற்றை மிக எளிதா சப்போர்ட் செய்யும்.

மேலும் இந்த ப்ளேயரை இயக்குவது மிகவும் எளிதாக இருக்கும். இவ்வளவு அளப்பரிய வசதிகளை வழங்கும் இந்த பிலிப்ஸ் ப்ளேயர் ரூ.13,000க்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X