Home
Music

மெய்மறக்க செய்யும் புதிய ஐபாட் ஸ்பீக்கர் சிஸ்டம்!

By Super

மெய்மறக்க செய்யும் புதிய ஐபாட் ஸ்பீக்கர் சிஸ்டம்!
ஐபாட் மற்றும் ஐபேடில் தெளிவாகவும், உயர் தரத்திலும் பாடல்களை கேட்பதற்கு புதிய ஸ்பீக்கர் சிஸ்டம் சர்வதேச மார்க்கெட்டிற்கு வந்துள்ளது.

பியோ சவுண்டு 8 என்ற பெயரில் பேங் அண்ட் ஒலுஃப்சென் கொண்டு வந்திருக்கும் இந்த புதிய ஸ்பீக்கர் சிஸ்டத்தில் ஐபாட் மற்றும் ஐபேடை டாக்கிங் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐபாட் மற்றும் ஐபேடில் உள்ள மெமரியில் பாடல் பைல்கள் சுருக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருப்பதால், கூடுதல் ஸ்பீக்கர்களை இணைத்தாலும் உயர்தர இசையை கேட்க இயலாத நிலை உள்ளது. ஆனால், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது பியோ சவுண்டு 8 ஸ்பீக்கர் சிஸ்டம்.

இரண்டு ஸ்பீக்கர்களை கொண்ட இந்த மியூசிக் சிஸ்டத்தின் நடுவில் ஐபாட் மற்றும் ஐபேடை டாக்கிங் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தை ஷோ கேஸ் அல்லது சுவரில் பொருத்திக்கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவிர, இது பல வண்ணங்களை கொண்ட கிரில்லுடன் கிடைக்கிறது. இந்த மியூசிக் சிஸ்டத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்க முடியும். அறைகளின் அளவை பொறுத்து சவுண்ட் மோடு மாற்றிக்கொள்ளும் வசதியும் இந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தில் உண்டு.

பியோ சவுண்டு மியூசிக் சிஸ்டத்தின் அப்ளிகேஷனை உங்களது சாதனத்தில் டவுன்லோடு செய்து கொண்டால் போதும். இன்டர்நெட்டில் இருந்தும் லைவ் மியூசிக் சேவை மூலம் பாடல்களை கேட்கலாம்.

இந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தை ஐபாட் மற்றும் ஐபேடில் மட்டும்தான் இணைக்க முடியும் என்றில்லை. இதனை சாதாரண எம்பி-3 பிளேயர்களுடன் இணைத்து விருப்பம்போல் பாடல்களை கேட்டு மகிழலாம். இந்த மியூசிக் சிஸ்டம் யூஎஸ்பி போர்ட்டையும் கொண்டிருக்கிறது.

இதுவரை கேட்டிராத அளவில் மிகத்துல்லியமான இசையை இந்த மியூசிக் சிஸ்டம் வழங்கும். மேலும், இசை சாதனங்களில் அடக்கி ஒடுக்கி சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பைல்களில் உள்ள பாடல்களைகூட இது மிக தெளிவாக வழங்கும்.

இந்தியாவில் இதன் விலை விபரங்கள் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், ஐபாட் மற்றும் ஐபேடுக்காக விற்பனை செய்யப்பட்டு வரும் மற்ற டாக்கிங் சிஸ்டம் அளவுக்கு இதன் விலையும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X