Home
Music

புதிய இயர்போனை அறிமுகப்படுத்தும் கிரேடோ!

By Super
புதிய இயர்போனை அறிமுகப்படுத்தும் கிரேடோ!

நியூயார்க்கை சேர்ந்த கிரேடோ நிறுவனம் ஹெட்போன் தயாரிப்பில் பாரம்பரியம் மிக்க நிறுவனமாக சிறந்து விளங்குகின்றனர். இந்த நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கிரேடோ ஜி10 என்ற புதிய இயர்போன் விரைவில் மார்க்கெட்டிற்கு வருகிறது.

இந்த இயர்போன் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாகவும், கிலிட்டரியால் பினிஷ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயர்போன் அக்வா பச்சை நிறத்தில் வருகிறது. இதன் இயர்பட்சுக்களை தனியாக பிரித்து எடுக்கவும் முடியும்.

இதில் உள்ள சவுண்ட் ட்யூப் அலுமினிய வளையத்தால் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜி10 இயர்போன் அளவில் மிகவும் சிறியதாகவும், எடை குறைவானதாகவும் இருக்கிறது. ஆனால் இது வழங்கும் இசை மிகவும் அபாரமானது.

மேலும் இது இயக் வாகஸ் ப்ரூபாக பயன்படும் 3 அளவுகள் கொண்ட சிலிக்கான் டிப்ஸ்களையும், 4 பில்டர்களையும் கொண்டிருக்கிறது. ஆனால் இதைக் கொண்டு செல்ல எந்த ஒரு பெட்டியும் வழங்கப்படாததால் பயணத்தின் போது இதை எடுத்துச் செல்வது சற்று சிரமமாக இருக்கும்.

இந்த இயர்போனில் மிக மிகத்துல்லியமான இசையை கேட்க முடிகிறது. இதில் எக்ஸ்ட்ரா பேஸ் பூஸ்ட் இல்லாததால் இதில் பேஸ் இசை அவ்வளவு அதிரடியாக இருக்காது.அதேவேளை, இந்த இயர்போனில் பாடல்களை கேட்கும்போது புதிய பரவசத்தை ஏற்படுத்தும்.

இந்த ஜி10 இயர்போன்கள் கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்துடன் வருகின்றது. இதன் சவுண்டு தெளிவு மூவிங் காயில் ட்ரைவர் மற்றும் ஆர்மச்சூர் டிசைனக்கு இடையில் உள்ளது. இந்த மூவிங் ஆர்மச்சூர் உயர் ப்ரீக்வன்சிகளை உருவாக்குகிறது. இந்த இயர்போனில் மைக்ரோபோன் கிடையாது. இதன் விலை சிற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X