எம்பி-4 ப்ளேயருக்கான புதிய ஹெட்போன்: எனர்ஜி சிஸ்டம்ஸ் அறிமுகம்

Posted By: Staff

எம்பி-4 ப்ளேயருக்கான புதிய ஹெட்போன்: எனர்ஜி சிஸ்டம்ஸ் அறிமுகம்
எனர்ஜி சிஸ்டம்ஸ் அதன் எம்பி-4 ப்ளேயர்கள் மூலம் பிரபலமானது. மேலும் அதன் படைப்புக்கள் மிகவும் தரம் வாய்ந்தவை. இப்போது அந்த நிறுவனம் புதிதாக எனர்ஜி சிஸ்டம்ஸ் 22 சீரிஸான எனர்ஜி 2204 டிஜே வயலட் ட்ரீம் மற்றும் எனர்ஜி 2204 டிஜே ரூபி ரெட் என்ற இரண்டு ஹெட்போன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக, எனர்ஜி 2204 டிஜே வயலட் ட்ரீம் மற்றும் எனர்ஜி 2204 டிஜே ரூபி ரெட் எம்பி4 ப்ளேயருக்கான பொருத்தமான் இயர்போன்களாகும். குறிப்பாக தரமான மற்றும் பொருத்தமான இயர்போன்கள் நமது காதுகளைக் காயப்படு்த்தாமல் நமது காதுகளுக்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் மக்களும் அவற்றை விரும்பி வாங்குவர். அதைப் புரிந்து கொண்டு இந்த எனர்ஜி சிஸ்டம்ஸ் 22 சீரிஸ் அருமையன் டிஜே ஹெட்போன்களை வழங்குகிறது.

எனர்ஜி 2204 டிஜே வயலட் ட்ரீம் மற்றும் எனர்ஜி 2204 டிஜே ரூபி ரெட் இரண்டும் ஸ்லீக் டிசைனுடன் மிக ஸ்டைலாக இருக்கிறது. குறிப்பாக இவை மெலிதாகவும் அதே நேரத்தில் குறைந்த எடையோடும் மற்றும் கையடக்கமாகவும் இருக்கின்றன. இவற்றின் மொத்த எடையே 24 கிராம்கள் மட்டுமே. இதன் பருமன் 8 மிமீ. மட்டுமே. இவற்றை எம்பி3, டபுள்யுஎம்எ மற்றும் டபுள்யுஎவி போன்ற பார்மட்டுகளோடும் இணைக்க முடியும்.

எனர்ஜி 2204 டிஜே வயலட் ட்ரீம் மற்றும் எனர்ஜி 2204 டிஜே ரூபி ரெட் மூலம் எம்பிஇஜிஎ4ல் வீடியோ பார்ப்பது ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.

எனர்ஜி 2204 டிஜே வயலட் ட்ரீம் மற்றும் எனர்ஜி 2204 டிஜே ரூபி ரெட்டில் 4ஜிபி சேமிப்பு வசதி உள்ளது. அதனால் நமக்குத் தேவயான பாடல்களை இவற்றில் சேமிக்க முடியும். மேலும் இது ரேடியோ மற்றும் எப்எம் ட்யூனரோடு வருகிறது. மேலும் இது ஒரு யூசர் ப்ரண்ட்லியாகவும் இருக்கிறது.

எனர்ஜி 2204 டிஜே வயலட் ட்ரீம் மற்றும் எனர்ஜி 2204 டிஜே ரூபி ரெட் இரண்டுமே ஸ்டீரியோ போனிக் ஒலியை நமக்கு வழங்குகிறது. மேலும் இது இன்லைன் ஒலி கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்துடன் வருவதால் இந்த ஹெட்போன்களிலேயே ஒலி அளவை மாற்றிக் கொள்ளலாம். மேலும் இது லை-யன் ரீஜார்ஜபுள் பேட்டரிகள் கொண்டு வருகிறது. இரண்டுமே 7 ரபீட் மோடுகளையும் 2 ப்ளே மோடுகளையும் உள்ளடக்கி இருக்கிறது. மேலும் இவற்றை எளிதாக அப்க்ரேட் செய்யவும் முடியும்.

எனர்ஜி 2204 டிஜே வயலட் ட்ரீம் மற்றும் எனர்ஜி 2204 டிஜே ரூபி ரெட் ஆகியவற்றின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot