Home
Music

கைக்கு எட்டும் விலையில் புதிய எம்பி3 ப்ளேயர்!

By Karthikeyan
கைக்கு எட்டும் விலையில் புதிய எம்பி3 ப்ளேயர்!

எமாட்டிக் நிறுவனம் சமீபத்தில் ஒரு சிறிய எம்பி3 ப்ளேயரை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ப்ளேயருக்கு எமாட்டிக் இ ஸ்போர்ட் க்ளிப் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த மியூசிக் ப்ளேயர் கையடக்க அளவில் மிக ஸ்டைலாக இருக்கிறது. இதன் விலையும் மிகக் குறைவே. அதாவது உயர்தர ஹெட்போன்களின் விலையை விட இந்த எம்பி3 ப்ளேயரின் விலை குறைவாகும். இதன் விலை ரூ.1,100 மட்டுமே.

இந்த மியூசிக் எம்பி3 ப்ளேயர் சூப்பரான தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது.

இந்த ப்ளேயரில் ஒரு 1.8 இன்ச் அளவில் ஒரு வண்ண திரை உள்ளது. அடுத்ததாக இந்த சாதனத்தில் ஒரு 5 மெகா பிக்சல் கேமரா உள்ளது. மேலும் 4ஜிபி மெமரியும் அதை விரிவுபடுத்தக் கூடிய மைக்ரோ எஸ்டி கார்டும் இந்த சாதனத்தில் உள்ளது. அதோடு இந்த மியூசிக் ப்ளேயரில் எப்எம் ரேடியோ மற்றும் இபுக் ரீடர் போன்ற அம்சங்களும் உள்ளன.

இந்த எம்பி3 ப்ளேயர் கைக்கு அடக்கமாக குறைந்த எடையில் இருப்பதால் இதை எடுத்துச் செல்வது மிக எளிதாக இருக்கும். இதன் திரைக்குக் கீழே இதன் இயக்கு பட்டன்கள் உள்ளன. இந்த சாதனம் சிவப்பு, பிங்க் மற்றும் பர்ப்புள் போன்ற வண்ணங்களில் வருகிறது. மேலும் ஹெட்போனைப் பொருத்தக் கூடிய ஒரு ஹெட்போன் ஜாக்கும் உள்ளது.

இதில் திரை உள்ளதால் மெனுவைப் பார்த்து இந்த சாதனத்தை இயக்க முடியும். இதன் கேமரா மூலம் வீடியோ பதிவையும் செய்ய முடியும். இந்த இசைச் சாதனம் மிகக் குறைந்த விலையில் வருவதால் பலரும் இதை விரும்பி வாங்குவர் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X