இசைப் புயலாக வரும் ஸ்மார்ட்போனுக்கான புதிய பீட்பாக்ஸ்!

Posted By: Karthikeyan
இசைப் புயலாக வரும் ஸ்மார்ட்போனுக்கான புதிய பீட்பாக்ஸ்!

டாக்டர் ட்ரே நிறுவனம் பீட்பாக்ஸ் என்ற ஒரு புதிய இசைச் சாதனத்தை அறிமும் செய்ய இருக்கிறது. இந்த பீட்பாக்ஸை மிக எளிதாக ஸ்மார்ட்போன்களில் இணைக்க முடியும். இந்த சாதனம் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது. இது பார்ப்பதற்கு மிகவும் பக்காவாக இருக்கிறது. அதோடு இந்த சாதனம் மிகத் தரமான க்ரிஸ்டன் ஒலியையும் வழங்குகிறது.

இந்த பீட்பாக்ஸ் பல நல்ல அம்சங்களை வழங்குகிறது. அதாவது இந்த பாக்சில் ஒரு மேம்படுத்தப்பட்ட ஒலி அமைப்பு உள்ளதால் இதில் இசை கேட்பது என்பது மிக அருமையாக இருக்கும். இதன் உருவத்தைவிட இதில் இருந்து வரும் ஒலி அளவு மிக அதிரடியாக இருக்கும். இதில் இருக்கும் மல்டி பர்ப்பஸ் ரிமோட் ஒலி அளவைக் கட்டுப்படுத்துவோதோடு அல்லாமல் ஐபோடு மற்றும் ஐபோன் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.

இந்த பீட்பாக்ஸ் மிக ஸ்டைலாக இருக்கிறது. இது கையடக்கமாக இருப்பதால் இதை வெளியில் எடுத்துச் செல்வதும் மிக எளிதாக இருக்கும். இந்த பீட்பாக்சில் ஐபோனை வைப்பதற்கான இடமும் உள்ளதால் இந்த பாக்சில் ஐபோனை பாதுகாப்பாக வைக்க முடியும். 22.5 x 8.75x 10 இன்ச் பரப்பைக் கொண்டிருக்கும் இந்த பீட்பாக்ஸ் 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

இந்த பீட்பாக்ஸை இயக்குவதும் மிகவும் எளிதாக இருக்கும். இதன் பேட்டரி இதற்கு அதிகமான இயங்கு நேரத்தை வழங்குகிறது. விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் இந்த பீட்பாக்ஸை ரூ.20000க்கு வாங்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot