ரூ.1,500 விலையில் புதிய டேப்லெட் ஸ்பீக்கர்!

By Karthikeyan
|
ரூ.1,500 விலையில் புதிய டேப்லெட் ஸ்பீக்கர்!

டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் எது வைத்திருந்தாலும் அதற்கான முதல் அக்சஸரி ஹெட்போன் அல்லது ஸ்பீக்கர் ஆகும். ஹெட்போனை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் ஸ்பீக்கரை பலர் பயன்படுத்தலாம். சந்தையில் ஏராளமான போர்ட்டபுள் ஸ்பீக்கர்கள் உள்ளன. அத்தகைய ஸ்பீக்கர்களின் விலையும் தாறுமாறாக உள்ளது.

இந்த பிரச்சினையை மனதில் வைத்து சாட்டெச்சி நிறுவனம் ஒரு புதிய தீர்வைக் கொண்டு வருகிறது. அதாவது இந்த நிறுவனம் டிவூம் ஐபிட்-2 என்ற ஒரு புதிய ஸ்பீக்கரை களமிறக்குகிறது. இந்த ஸ்பீக்கரை எல்லாவிதமான ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளிலும் பயன்படுத்த முடியும்.

இந்த டிவூம் ஸ்பீக்கரின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது அடிப்படையில் ஒரு சிறிய அளவிலான போர்ட்டபுள் ஸ்பீக்கர் ஆகும். இந்த ஸ்பீக்கர் 6 வாட்ஸைக் கொண்டிருப்பதால் இதன் ஒலி மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இனிமையாகவும் இருக்கும். இந்த ஸ்பீக்கர் ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 7 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.

இந்த டிவூம் ஸ்பீக்கர் பார்ப்பதற்கு ஒரு போன் அல்லது டேப்லெட் ஸ்டேன்ட் போல எளிமையாக உள்ளது. இந்த ஸ்பீக்கரின் முன்பகுதியில் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டுகளை வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்பீக்கரை மிக எளிதாக எங்கும் எடுத்துச் செல்லவும் முடியும்.

இந்த டிவூம் ஸ்பீக்கரின் ஆடியோ மிகப் பிரமாதமாக இருக்கும். இந்த ஸ்பீக்கர் 6 வாட்ஸ் கொண்டிருப்பதால் இதன் ஒலி அளவும் அதிகமாக இருக்கும். மேலும் இந்த ஸ்பீக்கரில் 30 பின் கனக்டர் உள்ளதால் இந்த ஸ்பீக்கர் இயங்கிக் கொண்டிருக்கும் போதே இதை சார்ஜ் செய்யவும் முடியும்.

இந்த சடெச்சி டிவூம் ஐபிட்-2 ஸ்பீக்கரின் விலை ரூ.1500 மட்டுமே. விலை குறைவாக இருப்பதால் இந்த ஸ்பீக்கர் விற்பனையில் சாதனை படைக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X