இசை பிரியர்களின் தாகத்தை தணிக்க வரும் ஓலோஜிக் இசை எந்திரன்

By Super
|
இசை பிரியர்களின் தாகத்தை தணிக்க வரும் ஓலோஜிக் இசை எந்திரன்
ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் டிஸ்க் ஜாக்கி வரமுடியுமா என்ற கனவு எல்லோருக்கும் உண்டு. அது நனவாக போகிறது. ஆம் அதற்காக ஓலாஜிக் நிறுவனம் அல்டிமேட் ஆட்டோமேட்டட் மியூசிக் பெர்சனாலிட்டையை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்கான அறிவிப்பை சாந்தா க்ளாராவில் நடந்த டிஇஎம்ஒ பால் 2011 கான்பரன்சில் வெளியிடப்பட்டது.

ஆட்டோமேட்டட் மியூசிக் பெர்சனாலிட்டி என்பது டிஸ்க் ஜாக்கி(டிஜே)யின் செயலைச் செய்யக்கூடிய மொபைல் ரோபோட் ஆகும். ஸ்மார்ட் போன் அக்சஸரி 2 வீல்களுடன், அறை அதிரும் ஆடியோ அமைப்புடன் மற்றும் கலங்கடிக்கும் ஒலிப் பெருக்கிகளுடன் வருகின்றன.

இந்த புதிய இசை ரோபோட் 73செமீ. உயரத்துடன் கருப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு பாப் தலையும் சிவப்பு நிற எல்இடி விளக்குகளும் இருக்கும். இந்த விளக்குகள் இசையின் தாளத்திற்கு ஏற்றார்போல் நடனமாடும். இதன் வால்யும் கண்ட்ரோல் மற்றும் ஆடியோ ஸ்க்ராட்ச் ஆகியவை நமக்கு விருப்பமான இசையை கேட்பதற்கு பேருதவியாக இருக்கும்.

மேலும் ஆட்டோமேட்டட் மீயூசிக் பெர்சனாலிட்டி (எஎம்பி) ஒரு பொம்மையைப் போன்று இருந்து ரிமோட் கண்ட்ரோலில் நடனமாடும். அதபோல் எஎம்பி பயன்படுத்துவோரை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதன் மூலம் அவர்கள் இருக்கும் பக்கம் இசையைச் செலுத்தும்.

இதில் நாம் தாராளமாக எம்பி3 ப்ளேயரை இயக்கலாம். அதற்கான 12 வாட் ஆம்ப்பை கொண்டுள்ளது. மேலும் இதன் இடது புறம் உள்ள மீயூசிக் எபக்ட் மற்றும் வலது புறம் உள்ள ஆடியோ கண்ட்ரோல் இரண்டு கைகளாக இருந்து செயல்படுகின்றன.

ஓலாஜிக்கின் தலைமை அதிகாரி கூறும் போது ஸ்மார்ட் போன்கள் மொபைல் சந்தையை பெருமளவு ஆக்கிரமித்து விட்டன. இந்த சூழலில் இந்த எஎம்பி ஒரு ரோபோட் போல் இருந்து இசை பிரியர்களின் தாகத்தைத் தணிக்கும். ஸ்மார்ட் போனுடன் இந்த எஎம்பியை இனணத்தால் நமக்குத் தேவையான இசையை இதில் கேட்டு மகிழலாம்.

குறிப்பாக யுஎஸ், யுகே மற்றும் ஜப்பான நாடுகளில் இந்த இசை ரோபோட்டுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளன. அடிப்படையில் இது ஒரு பொம்மையாகும். ஆனால் இதில் ரோபோட் வசதி உள்ளதால் இது அங்கும் இங்கும் நகர்ந்து நமக்குத் தேவையான இசைய வழங்கும்.

மேலும் ஓலாஜிக் நிறுவனம் எஎம்பியைப் போல் இன்னொரு புதிய டிவைஸையும் அறிமுகப்படுத்த திட்டிமிட்டிருக்கிறது. யுஎஸ், யுகே மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இந்த எஎம்பி விரைவில் வரும். இதைத்தொடர்ந்து, இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.33,750 ஆகு இருக்கும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X