'கும் கும்' இசையை வழங்கும் டிஸ்கோ ஸ்பீக்கர்

இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அந்த இசை அனுபவத்தை பெருக்கி வழங்குவதில் ஸ்பீக்கர்கள் மிக முக்கிய பங்கைச் செய்து வருகின்றன. அப்படிப்பட்ட ஸ்பீக்கர்களை பல நிறுவனங்கள் புதிது புதிதாக தினமும் களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் டூத் நிறுவனம் ஒரு புதிய கையடக்க ஸ்பீக்கரை களமிறக்குகிறது. இந்த ஸ்பீக்கருக்கு டிஸ்கோ2 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்பீக்கர் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் மிக ஸ்டைலாக இருக்கிறது. அதே நேரத்தில் பல நவீன தொழில் நுட்பங்களுடனும் வருகிறது. 470 கிராம் எடை கொண்ட இந்த ஸ்பீக்கரை 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். இந்த ஸ்பீக்கர் ப்ளூடூத் வசதி கொண்டிருப்பதால் இது வயர்லஸ் மூலம் இயங்குகிறது.
ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்ட இந்த ஸ்பீக்கர் 2 ஊபர்கள் மற்றும் 2 மிட்ரேஞ் ட்ரைவர்களைக் கொண்டிருப்பதால் இதில் இருந்து வரும் இசை தேவாமிர்தமாக இருக்கும். மேலும் இந்த ஸ்பீக்கரில் என்ஐ எம்எச் பவர் பேக் பேட்டரி மற்றும் 2 ட்வீட்டர்கள் உள்ளன.
இதன் பேட்டரி இந்த ஸ்பீக்கருக்கு 10 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. அதோடு இந்த ஸ்பீக்கர் 10 மீட்டர் தூரத்திற்கு வயர்லஸ் மூலம் இயங்கும். மேலும் இந்த ஸ்பீக்கரில் 3.3 எம்எம் ஸ்டீரியோ ஹெட்போன் ஜாக்கும் உள்ளதால் இதில் ஹெட்போனையும் இணைத்துக் கொள்ளலாம்.
இந்த ஸ்பீக்கரை டேப்லெட், கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் மற்றும் எம்பி3 ப்ளேயர் ஆகிய சாதனங்களோடு மிக எளிதாக இணைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்பீக்கர் இசைக்கு மகா உத்திரவாதம் வழங்கும்.
இந்த ஸ்பீக்கர் பளபளக்கும் கருப்பு நிறத்தில் களையாக வருகிறது. இதன் விலை ரூ.5000 ஆகும். இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications