புதுமையான ப்ளூடூத் ஹெட்செட்!

By Super
|
புதுமையான ப்ளூடூத் ஹெட்செட்!

உயர்தர மொபைல்களுக்கு இப்போது அமோக வரவேற்பு நிலவுகிறது. அதற்கு காரணம் அந்த உயர்தர போன்களில் வரும் ஹெட்போன்கள் மிக பக்காவாக இருக்கும். அதேபோல் உயர்தர ஹெட்போன்களும் இப்போது ஏராளமாக சந்தைக்கு படையெடுத்து வருகின்றன.

அந்த வரிசையில் இப்போது ஸ்டீல் சீரிஸ் நிறுவனம் டையப்லோ-3 என்ற உயர்தர ஹெட்செட்டை அறிமுகப்படுத்துகிறது.

இந்த ஸ்டீல் சீரிஸ் டையப்லோ 3 ஹெட்போனின் சிறப்புகளைப் பார்த்தால் அவை மிக அபாரமாக உள்ளது. முதலில் இதில் இரைச்சல் இருக்காது. இது குறைந்த எடையைக் கொண்டது. இதில் ரிட்ராக்டபுள் மைக்ரோபோன் உள்ளது. அதுபோல் எல்இடி இலூமினேசன் உள்ளது. ரிமோட் வசதியும் உள்ளது. சவுண்ட் ஈக்குலைசர் மற்றும் மைக்ரோபோன் மியூட் பட்டனும் இதில் உள்ளது.

இந்த டையப்லோ 3 ஹெட்போன் வயர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஹெட்போன் எல்இடி லைட்டுடன் வருகிறது. இதில் மொத்தம் 18 எல்இடி பல்புகள் உள்ளன. குறிப்பாக கேம் விளையாடும் போது இந்த லைட்டுகள் அதற்கு ஏற்றார்போல சைகை செய்யும்.

டையப்லோ ஒரு யுஎஸ்பி ஹெட்செட் ஆகும். ஏனெனில் இதன் இணைப்பு யுஎஸ்பி வசதியைக் கொணடுள்ளது. இதன் இணைக்கப்பட்ட கார்டு 3 அடி நீளத்தைக் கொண்டுள்ளது. இதை 6 அடி வரை நீளத்தை கூட்டிக்கொள்ள முடியும்.

இந்த டையப்லோ 3 ஹெட்போன் அப்ளிகேசன் சாப்ட்வேர் கொண்டு வருகிறது. இந்த சாப்ட்வேர் இல்லாமலே இந்த ஹெட்போனை கணினி மற்றும் டிவைஸ்களில் இணைக்க முடியும். ஆனால் இதை இன்னும் ட்வீக் செய்ய வேண்டுமானால் டிவைஸ் சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இதன் ஈக்குலைசர் கட்டுப்பாடுகளை தேவைக்கேற்ப கூட்டவே குறைக்கவோ முடியும். இதன் ரிட்ராக்டபுள் மைக்ரோபோன் இரைச்சலைத் தடுத்துவிடும். இதன் இசைத் தரமும் சூப்பராக இருக்கும். இந்த ஸ்டீல் டயப்லோ 3 ஹெட்செட்டின் விலை ரூ.5,500 ஆகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X