குறைந்த விலையில் நவீன வசதிகளுடன் ஓர் எம்பி3 ப்ளேயர்!

By Karthikeyan
|
குறைந்த விலையில் நவீன வசதிகளுடன் ஓர் எம்பி3 ப்ளேயர்!

டி-லிங்க் சமீபத்தில் ஒரு புதிய மலிவு விலை மீடியா ப்ளேயரை அறிமுகம் செய்திருக்கிறு. இந்த மீடியா ப்ளேயருக்கு டிஎஸ்எம்-310 மூவி நைட் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த எம்பி3 ப்ளேயரில் இருக்கும் வியுடியு மூலம் புதிதாக வெளிவரும் திரைப்படங்களை சூப்பராக பார்க்க முடியும்.

இந்த எம்பி3 ப்ளேயர் அட்டகாசமான வசதிகளுடன் வருகின்றது. குறிப்பாக இந்த சாதனத்தில் வைபை, எர்த்நெட், முழு எச்டி 1080பி தரமான வீடியோ மற்றும் ரிமோட் வசதி ஆகியவை உள்ளன. மேலும் இதன் எடை 180 கிரம் மட்டுமே.

இந்த இசைப் பேழையில் எச்டிஎம்ஐ வசதி உள்ளதால் இதை மிக எளிதாக டிவியில் இணைக்க முடியும். இது ரிமோட் வசதி கொண்டிருப்பதால் இதை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும்.

மேலும் இந்த சாதனத்தில் பல வகையான ஆன்லைன் அப்ளிகேசன்களும் உள்ளன. அதாவது நெட்பிலிக்ஸ், யுடியூப், பண்டோரா, மிட்லிங்க், மூவிஸ் மற்றும் டிவி காட்சிகள், வியுடியு மற்றும் பிக்காசா போன்ற ஆன்லைன் அப்ளிகேசன்களை இந்த எம்பி3 ப்ளேயரில் அனுபவிக்க முடியும்.

அதோடு இந்த இசைச் சாதனம் ஐபிவி4, எஆர்பி, யுடிபி, ஐசிஎம்பி, டிஎச்சிபி, டிஎன்எஸ் மற்றும் எச்டிடிபி போன்ற நெட்வொர்க் ப்ரோட்டா கால்களையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த சாதனத்தில் ஆன் ஸ்க்ரீன் மெனுவும் உள்ளதால் இதை மிக எளிதாக இயக்க முடியும்.

மேற்சொன்ன பலவகையான தொழில் நுட்பங்களுடன் வரும் இந்த எம்பி3 ப்ளேயர் மிகக் குறைந்த விலையில் வருகிறது. அதாவது இதன் விலை ரூ.3000 மட்டுமே.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X