Home
Music

புதிய மல்டி மீடியா ப்ளேயரை விற்பனைக்கு கொண்டு வரும் கிரியேட்டிவ்

By Super
புதிய மல்டி மீடியா ப்ளேயரை விற்பனைக்கு கொண்டு வரும் கிரியேட்டிவ்
தரமான அதே நேரத்தில் நீடித்து உழைக்கக்கூடிய மின்னணுப் பொருட்களை தயாரித்து வழங்குவதில் கிரியேட்டிவ் நிறுவனம் தனி இடத்தைப் பெற்றுள்ளது. அதன் படைப்புகளில் பெரும்பாலும் அதிகமான குறைகள் இருக்காது.

இதே தரம் என்ற தாரக மந்திரத்துடன் சென் எப்ஐ3 மல்டிமீடியா ப்ளேயரை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

பார்ப்பதற்கு மிக அழகாகவும், அடக்கமாகவும் இருக்கிறது. இது கைக்கு அடக்கமாக இருப்பதால் மிக கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இதில் தொடுதிரை வசதி இல்லாததால் இதில் பட்டன்கள் மூலமாகத்தான் அப்ளிகேஷன்களை இயக்க முடியும்.

கிரியேட்டிவ் சென் எப்ஐ3 மல்டிமீடியா ப்ளேயரின் அடுத்த சிறப்பு அதன் ப்ளூடூத் ஆகும். இந்த ப்ளூடூத் மூலம் எளிதாக தகவல்கள் மற்றும் கோப்புகளை எளிதாக பரிமாற்றம் செய்ய முடியும்.

மேலும் இது ஆப்ட்-எக்ஸ் கோடக் உதவியுடன் உயர்ந்த தரம் கொண்ட ஆடியோவுடன் வருகிறது. இது இசைத் துறையில் ஒரு முன்னோடியாகும். மேலும் இந்த கையடக்க பேழை எப்எல்எசி கோப்புகளையும் சப்போர்ட் செய்யும்.

கிரியேட்டிவ் சென் எப்ஐ3 மல்டிமீடியா ப்ளேயரின் டிஸ்ப்ளே 2 இன்ச் ஆகும். இதன் அளவுகளைப் பார்த்தால் அது 65*45.5*12.5 மிமீ. ஆகும்.

இதில் மைக்ரோஎஸ்டி கார்ட் உள்ளதால் இதன் சேமிப்பை அதிகரிக்க முடியும். அதன் மூலம் நாம் அதிகமான பாடல்களையும் வீடியோக்களையும் சேமிக்க முடியும். இதன் சேமிப்பு அளவு மைக்ரோஎஸ்டி கார்டுடன் கூடிய 32ஜிபி ஆகும்.

மேலும் இது இன்பில்ட் எக்ஸ்-பை கிரஸ்டலைஸர் கொண்டிருப்பதால் இதன் ஒலி மிக தரமாக இருக்கும்.
மேலும் இதில் ஹெட்போனை பொருத்தி இசை கேட்கும் போது இதன் எக்ஸ்-பை தொழில் நுட்பம் இசையை மெருகேற்றி நம்மை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லும்.

இதிலிருக்கிற ஒலி அமைப்பு சற்று தூரத்திலிருந்து வருவதைப் போல் இருக்கும். மேலும் 8ஜிபி மற்றும் 16ஜிபி சேமிப்பு அளவுகளுக்கு ஏற்ப இந்த பேழை மாறுபடும்.

கிரியேட்டிவ் சென் எப்ஐ3 மல்டிமீடியா ப்ளேயர் டபுள்யுஎம்எ மற்றும் எம்பி3 பைல்களை சப்போர்ட் செய்யும். அதுபோல் வீடியோ பார்மட்டுகளான எம்பிஇஜி4-எஸ்பி, எவிஐ மற்றும் டபுள்யுஎம்வி9 போன்றவற்றையும் சப்போர்ட் செய்யும்.

மேலும் இது 262 கே நிறங்களையும் சப்போர்ட் செய்கிறது.

மேலும் வாய்ஸ் ரிக்கார்டிங் செய்வதற்கு மைக்கும் அதுபோல் எப்எம் ட்யூனர்களையும் வழங்குகிறது. இது லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டிருப்பதால் அது ஆடியோ மோடில் 20 மணி நேரமும் அதுபோல் வீடியோ மோடில் 5 மணி நேரமும் தாங்கும் வலிமை கொண்டது.

கிரியேட்டிவ் சென் எப்ஐ3 மல்டிமீடியா ப்ளேயரின் விலையைப் பார்த்தால் அது 8ஜிபியுடன் ரூ.4,000க்கும், 16ஜிபியுடன் ரூ.6,000க்கும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X